திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது. (இ - ள்.) என்னுடைய தலைவன், தன்நாடிழந்த வறுமையாற்புற்கை நுகர்ந்தானாயினும்பகைவர் அஞ்சத்தக்க பெரியதோளையுடையன்; யாம்,அவனுடைய சிறைப்புறத்திருந்தும் பலகாலுங் காணப்பெறினும்மெய்யுறப்பெறாமையின் வருந்திப் 1 பொன்போலும்நிறத்தையுடையேமாயினேம்; போரையேற்று என் தலைவன்போர்க்களத்தின்கட் புகிற் கல்லென்னும் ஒலியையுடையபெரிய ஊரின்கட் 2 போர்செய்தற்கெடுத்த விழாவினையுடைய இடத்துத் தோள்வலி பேசி இன்பமுற்றுப்போந்த வீரர்க்கு உப்புவிற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடையதுறையை ஒப்பன்-எ - று. என்னை, புற்கையுண்டும் பகைவெல்லும்பெருந்தோளனாம்; யாம், அவன் சிறைப்புறத்திருந்தும்பசப்பை வெல்லமாட்டாமையால் பொன் போன்றனமெனத்தன் வேட்கைமிகுதி கூறியவாறு. அன்றி, இதற்கு என்னைபுற்கையுண்டும் வழங்கும் பெரியதோளை யுடையனாயும்நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும்பொன்போற் பசந்தேமென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரும்உளர். உமணர் வெரூஉம் துறையன்னனென்றதனாற்பயன்: வருத்துங் கூற்றின் ஆடவரையும் மகளிரையும் ஒக்கவருத்துவதல்லதுஅருளுமாறு கற்றிலனோவென்னும் நினைவிற்றாக்குக. |