85
என்னைக் கூரிஃ தன்மை யானும்
என்னைக்கு நாடிஃ தன்மை யானும்
ஆடா டென்ப வொருசா ரோரே
ஆடன் றென்ப வொருசா ரோரே
5நல்ல பல்லோ ரிருநன் மொழியே
அஞ்சிலம் பொலிப்ப வோடி யெம்மில்
முழாவரைப் போந்தை பொருந்திநின்
றியான்கண் டனனவ னாடா குதலே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) என்னுடைய தலைவனுக்குஊர் இஃது அல்லாமையானும் என்னுடைய தலைவனுக்கு நாடுஇஃது அல்லாமையானும் அவனுக்கு இயல்பாய வென்றியைஅவனது வென்றியென்று சிறப்பாகச்சொல்லுவர்ஒருபக்கத்தார்; அவனது வென்றியன்றென்று சொல்லுவர்ஒருபக்கத்தார்; பலரும் ஒத்து ஒவ்வாமற் கூறும் இவ்விருவகைப்பட்டநல்ல வார்த்தையும் நல்லவாயிருந்தன; அவ்வாறு கூறினராயினும்,அழகிய சிலம்பார்ப்ப ஓடிச்சென்று, எம்முடைய மனையின்கண்முழாப்போலும் பக்கத்தையுடைய பனையைப் பொருந்திநின்று,எனது 1 வளையும் கலையு முதலானவை தோற்கும் ஆண்மையுடைமையின்,அவனது வென்றி யாதல் யான் கண்டேன்-எ - று.

பின்னும் ஒருகால் என்னை யென்றதனால்,2 இவரது ஆதரவு தோற்றி நின்றது.

நல்லவென்றது இகழ்ச்சிக்குறிப்பு.

ஆடென்றதூஉம் ஆடன்றென்றதூஉம்அவனைச் சுட்டியே கூறினமையின், இருநன்மொழியும் நல்லவென்றாரெனினும்அமையும்.


(கு - ரை.) 1-2. புறத்திணைப்பகுதியில் தலைவி, தலைவனை, ‘என்னை’ என்பதற்கு மேற்கோள்;தொல். பொருளியல், சூ. 52, ந.

3. ஆடு ஆடு : அடுக்குத்தொடர்.

7. புறநா. 375 : 4; “முழவுமுதலரைய தடவுநிலைப் பெண்ணை” (குறுந். 301 : 1)

ஏதாவதொன்றனைச் சார்ந்துநின்றுஒருவரைப்பார்த்தலும் அங்ஙனம் நின்று ஒன்றைக்கேட்டலும்நாணமுடைய குலமகளிர்க்கு இயல்பு; புறநா. 86 : 1 - 2.

(85)


1 புறநா. 83 : 2.

2 திருச்சிற். 47, உரை.