(கு - ரை.) 1. “அரிமுன்கை’‘ (கலித்.147 : 36). அரியென்பது ஐம்மைப் பொருளில்வருமென்பதற்கு இவ்வடிமேற்கோள்; தொல். உரி.சூ. 59, இளம்.; சூ. 60, சே.; சூ. 58, ந.; இ. வி. சூ. 290,‘அரி மயிர் முன்கை‘ என்பது அழகு; நேமி.சொல். 59, உரை. 5. “புல்லிலை வஞ்சிப் புறமதிலலைக்கும், கல்லென் பொருநை” (புறநா. 387 : 33 -4) 2 - 5. “மணற், செய்வுறுபாவைக்குக் கொய்பூத் தைஇத், தண் கய மாடு மகளிர்”(புறநா. 243 : 1 - 3) 6. பொருவென்பது, பயவுவமைபற்றிவருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம.சூ. 14, பேர்.; இ. வி. சூ. 642, உரை. 7 - 9. சின்னென்பது பால்காட்டும்எழுத்தோடு அடுத்து வருமென்பதற்கு மேற்கோள்;தொல். இடை. சூ 26, பேர். 11 - 3. தொல். எச்ச. சூ. 53,தெய்வச். மேற். 16. “அழல்புரிந்த வடர்தாமரை”(புறநா. 29 : 1) 15 - 7. எனவும் ஆங்கும்அசைநிலையாயின வென்பதற்கு மேற்கோள்; தொல்.இடை.. சூ. 47, தெய்வச். 14 - 7. “இழைபெற்ற.....பெற்றிசினே;இஃது, ஈற்றயலடி மூச்சீர்த் தாகிவந்துசெந்தூக்கியற்றாகி இற்ற வஞ்சிப்பா” (தொல்.செய். சூ. 71, பேர்.) 11 - 7. பாடினி இழைபெறுதல், பாணன்பொற்றாமரை பெறுதல்: (கலித். 54 : 2, 85 : 2; புறநா.12 : 1, 29 : 1 - 5, 69 : 4 - 21, 126 : 1 - 3, 319 : 9 - 15, 364 : 1 - 3); “எரியகைந்தன்ன வேடிறாமரை, சுரியிரும் பித்தை பொலியச்சூட்டி, நூலின் வலவா நுணங்கரின் மாலை, வாலொளிமுத்தமொடு பாடினி யணிய” (பொருந. 159 - 62), “தலைவன்றாமரை மலைய விறலியர், சீர்கெழு சிறப்பின்விளங்கிழை யணிய” (மலைபடு. 569 - 70) மு. “மகிழ்செய்தற்கட்காமம் நறவினும் சிறந்ததேயெனினும் இவள் குறிப்புஆராய்ந்தறியாமையின் யானது பெற்றிலேனெனக்குறிப்பெச்சம் வருவித்துரைக்க, ‘அரிமயிர்த்திரண்முன்கை’என்னும் புறப்பாட்டிற் குறிப்புப்போல” (குறள்,1090, பரிமேல்.) (11)
1. தொல்.வேற்றுமைமயங்கு. சூ. 11. 2. “பாடினி, பாடின பாணிக்கேற்ப” (பொருந. 47 - 8)
|