(கு - ரை.) 1. பருத்திவேலி; புறநா.324 : 7; “ பன்னல் வேலியிப் பணைநல் லூரே” (புறநா.345 : 20) 2. உழுத்ததர் - உழுந்தின் சக்கை;உழுத்தரென்ற பாடத்திற்கு உழுந்தென்று பொருள்கொள்க. 3. தோணியின் - தோணியைப்போல;போழ - பிளந்துசெல்ல; “வருபடை போழ்ந்து”, “மான்மேல்......கரைபொரு முந்நீர்த் திமிலிற்போழ்ந்து”(புறநா. 295 : 4, 303 : 2 - 7) புரவி (2) போழ (3) 2 - 3. “நெல்லொடு வந்த வல்வாய்ப்பஃறி, பணைநிலைப் புரவியினணைமுதற் பிணிக்கும்” (பட்டினப்.30 - 31) ; “செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர்,நெறிதரு புரவியின் மறிதருந் திமில்” (யா. வி.சூ. 86, மேற்.) 4. நெய்ம்மிதி - நெய்யை வார்த்துமிதித்த உணவை; “நெய்ம்மிதி கவளம்” (பெரும்பாண்.394); குதிரை நெய்ம்மிதி யருந்தல் : “கொய்ம்மயிரெருத்தம் பிணர்படப் பெருகி, நெய்ம்மிதி முனைஇயகொழுஞ்சோற்றார்கை ...வாமான்” (அகநா. 400 : 6- 13), “கொய்சுவற் புரவி” (அகநா. 154: 11, சீவக.3049). எருத்து - புறக்கழுத்து. 5. தார் - கிண்கிணிமாலை. 6. அணங்குடைமுருகன் - வருத்துதலையுடையமுருகன்; “செவ்வேள்......மராத்தண்சாயை நின்றணங்குந்தைய னீநிற்க சாரலிலே” (தஞ்சை. 132).கோட்டம் - கோயில்; முருகன்கோட்டம் - குமரகோட்டம். 7. கலந்தொடாமகளிர் - பாண்டங்களைத்தொடுதற்குரிய தூய்மையில்லாத மகளிர். புரவிகள் (5) நின்ற (7) மு. ‘குதிரைநிலை’ என்பர்; தொல்.புறத்திணை. சூ. 17, ந. (299)
|