(கு - ரை.) 1. பெற்றுப் பாதுகாத்தல்என்னிடத்திலுள்ள கடமையாம்; “ஈன்றுபுறந் தந்தவெம்மு முள்ளாள்” (அகநா. 35) தலைக்கடன் -முதன்மை யான கடனுமாம். 2. தன் குலத்துக்குரிய படைக்கலப்பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு அதற்குரியசெய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாகக் செய்தல்தகப்பனுக்குக் கடமையாம். “உயர்மிக்க தந்தை” என்பதற்கு,“பிள்ளை உயர்ச்சிமிகுதற்குக் காரணமான தந்தை”என்று பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர்; சீவக.473, ந. 3. படைக்கலத்தைத் திருத்தமாகச்செய்துகொடுத்தல் கொல்லனுக்குக் கடமையாகும்; வடித்தல்- கூரிதாக்கலுமாம். ‘கொல்லன்’ என்பதற்கு வேல்வடிக்குங்கொல்லனென இவ்வடியை உட்கொண்டு அடியார்க்குநல்லார்பொருளெழுதியிருத்தல் ஈண்டு அறியற்பாலது; சிலப்.12: “இளமா வெயிற்றி”, (கலித். 137) 5 - 6. “செல்சம முருக்கி” (முருகு.99); “பொருந்தா மன்னரருஞ்சம முருக்கி, யக்களத் தொழிதல்செல்லாய் மிக்க, புகர்முகக் குஞ்சர மெறிந்தவெஃகம், அதன்முகத் தொழிய நீபோந் தனையே” (தகடூர்யாத்திரை,“வாதுவல்”) மு. தொல். புறத்திணை. சூ. 24, ந.மேற். (312)
|