(கு - ரை.) 1. புறநா. 270: 5, 277:2. 2. இரங்காழ் - இரமரத்தின் விதை;இரவென ஒரு மரமுண்டென்பர்; புறநா. 281: 1; “இரங்காழன்ன வரும்புமுதி ரீங்கை” (அகநா. 125: 3). “இரவுமிண்டுங் குரவுங் கோங்கும்...வாகையும் பிறவும் வன்மரமொடுங்கி”(பெருங். 1. 52: 40 - 44); இப்பெயர், இரா, இரவு, இரவம்எனவும் நூல்களில் வழங்கும். 3. செம்முதுபெண்டு; புறநா. 280: 7. 4. ஆய்மகள் - இடைச்சி. 5. குடம் நிறைய வுள்ளபாலிற் றெறித்தசிறிய மோர்த்துளியைப் போல. 5 - 6. புறநா. 328: 7; “பாலுறு பிரையெனப்பரந்த தெங்குமே” (கம்ப. மிதிலை. 41) 2 - 6. இ. வி. சூ. 641, உரை, மேற். மு. தும்பைத்திணைத்துறைகளுள்,தானைநிலையின்பாற்படுமென்பர்; தொல்.புறத்திணை. சூ. 14, இளம்.; சூ. 17, ந. (276)
|