349
நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
5றரிமதர் மழைக்க ணம்மா வரிவை
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.

(பி - ம்.) 1 ‘நுதிபல’, ‘நுதலவிளையாதுடை’ 5 ‘றெரிமதர்’ 6 ‘செநதீப போலடி’

திணையும் துறையும் அவை.

மதுரை மருதனிளநாகனார்.


(கு - ரை.) 4. படிவம் - விரதம்.

6 - 7. "முளையிள நெருப்பின் முதுக்குறைந் தனளே" (தொல்.அகத். சூ. 54, ந. மேற்.) 4 - 7. தக்கயாகப்பரணி,304, மேற்.

மு. காஞ்சித்திணைத்துறைகளுள், நிகர்த்துமேல்வந்த வேந்தனொடு முதுகுடி, மகட்பாடு அஞ்சியமகட்பாற்காஞ்சியென்னுந் துறைக்கு மேற்கோள்காட்டி, ‘இது பெருஞ்சிக்கல்கிழான் மகட்கொடை மறுத்தது’ என்பர்; தொல். புறந்திணை. சூ. 19, இளம்.; சூ. 24, ந.

(349)