திணை - அது; துறை - பாணாற்றுப்படை. அவனை மருதனிளநாகனார் பாடியது. (இ - ள்.) பெற்றத்தினது இனம்மிக்க வழிபலவும் வந்து மான்றிரள் மிக்கமலைபின்கழிய மீனினந்தழைத்த துறைபலவற்றையும் நீந்திநினைந்து வந்த வள்ளிய ஓசையையுடைத்தாகிய சிறியயாழையும் சிதாராகிய உடையையுமுடைய மூத்தபாணனே!நீதான், அவன்பாற் சில கருதிப் போகின்றமையின்பெரிய எண்ணத்தையுடையை; நின்னுடைய தலைவன் இப்பொழுதுபோய்ப் பின் ஒருநாட் பரிசிற்குவாவென்று சொல்லான்;தழைத்த கரிய கூந்தலையுடைய ஆயிழைக்குத் தலைவன்,கிளி மருவிய அகன்ற புனத்தின்கண் மரப்பொதும்பின்கண்வைத்த பெரிய கதிரை யொப்பனாதலின், நீ அவன்பாற்பரிசில் பெற்றுவருதற்கண் நின்னைப் 1 பழையபாணனென்றுஅறிவார் யார் ?-எ - று. 'நின்னை வருதலறிந்தனர் யார்' என்றதன்கருத்து, நின்னை அறிவாரும் அறியாத தன்மையையாவையென்பதாம். அறிவார் யாரென்பது அறிந்தனர் யாரெனக் காலமயக்கமாயிற்று. நினக்கு அவன் பரிசில் தப்பாமல் தருமென்பான், நின்னிறையென்றான். 'கிளி..........குரலனையன்' என்றது கிளியீடு வாய்த்தாற்போல்வனென்னும் வழக்கைப்பற்றி நின்றது. |