(கு - ரை.) 1. அத்தம் - அரிய வழி.பெருவிறல் - தலைவன். 2. நச்சி - விரும்பி. 3. காணிய -காண்பதற்கு. 4. கலித். 50 : 15 - 7; கடவ - ஈதற்குரியன. 5. உப்பைக் கொண்டுசெலுத்துகின்றவண்டிகளையுடைய உப்பு வாணிகர்; ஒய்தல் - செலுத்துதல்;“உமணர், உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ” (புறநா.116 : 7 - 8) 2 - 6. “ஒன்னார், ஆரெயி லவர்கட்டாகவு நுமதெனப், பாண்கடனிறுக்கும் வள்ளியோய்”(புறநா. 203 : 9 - 11), “கிளைபொரு ளில்லான் கொடையேகொடைப்பயன்” (நாலடி. 65) என்பவற்றை இவ்வடிகளின்பொருள் நினைப்பிக்கின்றது. 7. அவன் கருதிய பொருள் இகழற்பாலதன்று;எள்ளுதல் - இகழுதல். மு. ‘வேந்தன் சீர்சால் சிறப்பெடுத்துரைத்தல்’ (தொல். புறத்திணை. சூ. 5, ந.)என்பதற்கு, ‘வேந்தற்குரிய புகழமைந்த தலைமைகளைஒருவற்குரியவாக அவன் படையாளரும் பிறரும் கூறல்’என்று பொருள் கூறி, இதனை மேற்கோள் காட்டி, இதுபடையாளர் கூற்றென்றும், இதற்கு முடிவேந்தன் சிறப்பெடுத்துரைத்தலென்றுகூறின் அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்கவென்றும்கூறுவர். (313)
|