335
அடலருந் துப்பின்............
.........................குருந்தே முல்லையென்
றிந்நான் கல்லது பூவு மில்லை
கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினையே
5சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொ
டிந்நான் கல்ல துணாவு மில்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
10ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.

(பி - ம்.) 7 ‘பாணன் பறையன் றுடியன் கடம்பனென்று'

திணையும் துறையும் அவை.

மாங்குடிகிழார் (பி - ம். மாறுகுடிகிழார்)


(கு - ரை.) 1. துப்பு - வலி.

4. "வன்பாலாற் கருங்கால் வரகின்" (புறநா. 384 ; 4)

7 - 8. ‘இனிப் பலவயினானும்............முடிபின செய்யுளு ளெனவே, சிலவயினான் அஃறிணைவிரவாது உயர்திணையானெண்ணி அஃறிணை முடிபிற்றாகலும் உண்டு, செய்யுளகத்து ; உ-ம் : பாணன்.......குடியுமில்லை எனவரும்' (தொல். கிளவி. சூ. 51, இளம்.) ; ‘பலவயினானு மென்றதனாற் சிலவயினாற்றிணைவிரவாது உயர்திணையானெண்ணி அஃறிணையான் முடிவனகொள்கவென்பது ; உ - ம் : பாணன்..........குடியுமில்லை : எனவரும்' (தொல். கிளவி. சூ. 51, கல்.) ‘பாணன்..........குடியுமில்லை : என.........உரையாசிரியர் கூறினாராலெனின், பாணன் முதலாயினாரைக் குடியென்று சுட்டியவழிக்
குடிக்கு ஏற்ற தொகைகொடுத்தல் வழுவன்மையான், அவ்வுரை போலியுரை யென்க ; குடியென்று சுட்டாதவழிப் பாணன் பறையன் றுடியன் கடம்பனென்று அந்நால்வருமல்லது குடியில்லை யென்றயாம்' (தொல்.கிளவி. சூ. 51, சே.) ; ‘பாணன் பறையன்........குடியு மில்லையென்றது பாண்குடி பறைக்குடியெனக் குடியைச் சுட்டிநில்லாது பாணன் பறையன் எனப் பால்காட்டி நிற்றலான் உயர்திணைப்பொருள் நின்று அஃறிணைமுடிபு கொண்டனவேயாம்' (தொல்.கிளவி. சூ. 51, ந.) ; ‘பாணன் பறையன்.......குடியுமில்லை ; என்பது உயர்திணை அஃறிணையான் முடிந்தது; இவ்வழு யாண்டு அமைக்கப்படுமோவெனின், அது வழுவாயினன்றே அமைக்கவேண்டுவது ; குடியென்பதனை எல்லாவற்றோடும் கூட்டியுரைக்கப்படுதலின் வழாநிலையாமென்க' (நன்.சூ. 377, மயிலை.) ; ‘பாணன்.........குடியுமில்லை : என உயர்திணையெண்ணி அஃறிணைமுடிபினவாய வழு யாண்டமைக்கப்படுமெனிற் குடியென்பதனைப் பாணன்முதல் நான்கோடும் கூட்டியுரைக்கப்படுதலின் வழாநிலையாமென்க' (நன். வி. சூ. 378) ; ‘பாணன்.......குடியுமில்லை : எனத் திணைவிரவாது உயர்திணையானெண்ணி அஃறிணையான் முடிந்த இவ்வழு யாண்டமைக்கப்படுமோ வெனின், பாணன் முதலாயினாரைக் குடியென்று சுட்டியவழிக் குடிக்கு ஏற்ற தொகைகொடுத்தல் வழுவன்மையான் அமைத்தல் யாண்டைய தென்க' (இ. வி.சூ. 298, உரை) ; ‘மக்கட்சுட்டென்புழி......அங்ஙன முணர்த்திற்றேல், பாணன்...........குடியுமில்லை : என்புழிப் பாணன் முதலியன போல மக்களென்பது ஆண்டு அஃறிணைச்சொல்லாதல் வேண்டும் ; வேண்டவே, ‘அஃதல பிறவே யென அஃறிணைச்சுட்டுப்பெயராற் கூறாது அவரல பிறவென்றல் திணைவழுவாய் முடியுமாதலின் அஃதாசிரியர் கருத்தன்றென்றொழிக' (தொல்.சூத்திரவிருத்தி.)

10. புறநா.301 : 6, குறிப்புரை

11 - 2. ‘பரவுதல்' என்னும் உரிச்சொல் வழுத்துதலாகிய குறிப்புணர்த்தியதற்கு மேற்கோள்; தொல்.உரி. சூ. 86, சே,; 84, ந.; இ. வி.சூ. 281, உரை.

(335)