(கு - ரை.) 1. தடாரி விம்மென - கிணைப்பறை ஒலிப்ப ; "வார் வலந்த துடிவிம்ம" (பு. வெ. 13) 4. கணையாகிய நீர்த்துளி ; "கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை" (புறநா. 369 : 9) 5. தெவ்வர் தலையடுப்பில் - பகைவருடைய தலைகளாகிய அடுப்பில்; "ஆண்டலை யணங்கடுப்பு" (மதுரைக். 29) 9. வாலுவன் - மடையன். 5 - 9. "முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித், தொடித்தோட் டுடுப்பிற் றுழைஇய வூன்சோறு, மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்ட" (சிலப்.26 : 242 - 4) 12. களம்வேட்டோய் - களவேள்விசெய்தோய் ; களவேள்வி இன்ன தென்பதை, ‘நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போரழித்து அதரி திரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட்பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல அரசனும் நாற்படையையுங் கொன்று களத்திற்குவித்து எருது களிறாக வாண்மடலோச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப்பேருலைக்கண் ஏற்றி, ஈனாவேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலிகொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்’ (தொல். புறத்திணை. சூ. 21, ந.) என்பதனால் உணர்க. வந்ததெல்லாம் (2) முகக்குவமென (13) (372)
|