திணை - அது; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) வண்மையாதல் வலியாதல் நன்மையொன்றுடைய பிறருடைய மலைகள்; எந்நாளும் இரண்டு நன்மையையுடைத்து, பெரிய கொண்கானமென்னும் மலை; அது, தன்பாற் பரிசில் நச்சிப்போன இரப்போர் காரணமாகத் தான் அவர்க்கு முன்பு 1கடன் கொடுத்தோராலே வளைப் புண்ணப்பட்டுக் கிடப்பினுங் கிடக்கும்; அதுவன்றி, நிறுத்தற்கரிய படையையுடைய அரசரைத் திறைகொண்டு அவரை மீட்கும் தலைமையையு முடைத்து-எ - று. இரவலர்சுட்டி யென்று பாடமோதி, இரவலர் கருதிக்கொண்டு புகழ்களைத் தொடுத்துண்ணக்கிடக்கினும் கிடக்குமெனவும் 2இரவலர் எமது எமதென்று கூறிட்டுண்ணக் கிடக்கினுங் கிடக்குமெனவும் உரைப்பினும் அமையும். இது கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும் கூறியவாறு. |