186
நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால், யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

(பி - ம்.) 3 ‘ யாமுயிர்’

திணையும் துறையும் அவை.

மோசிகீரனார் பாடியது. (பி - ம். மாதிமாதிரத்தனார்பாட்டு)

(இ - ள்.) வேந்தனாகிய உயிரையுடைத்து,பரந்த இடத்தையுடைய உலகம்; அதனால், இவ்வுலகத்தார்க்குநெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று; யான் உயிரென்பதனைஅறிகை வேலான் மிக்க படையையுடைய அரசனுக்கு முறைமை-எ- று.

மன்னனுயிர்த்தென்ற கருத்து : 1உயிரையாக்கும் நெல்லும் நீரும் உளவாவது மன்னன்முறைசெய்து காப்பினென்றதாம்.


(கு - ரை.) 2. “உலகிற்கோருயிர்ப், பெற்றியான் பயாபதி யென்னும்பேருடை, வெற்றிவேன் மணிமுடி வேந்தர் வேந்தனே”(சூளா. நகர. 16); “மன்னுயிர் ஞாலக் கின்னுயிரொக்கு, மிறை” (பெருங். 2. 11 : 17 - 8); “உலகினுக்குயிரா யிருந்தன னிறைகுலோத்துங்கன்” (திருவிளை.பழியஞ்சின. 44)

சிறப்பினால் உயர்திணை அஃறிணையானதற்குமேற்கோள்; நன். சூ. 378, மயிலை; இ. வி. சூ.299, உரை.

மு. “நெல்லுயிர் மாந்தர்க்கெல்லா நீருயி ரிரண்டுஞ் செப்பிற், புல்லுயிர்புகைந்து பொங்கு முழங்கழ லிலங்கு வாட்கை, மல்லலங்களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர்ஞாலந் தன்னுணாமவே னம்பி யென்றான்” (சீவக.2908) (186)


1 “இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட, பெயலும் விளையுளுந்