332
பிறர்வேல் போலா தாகி யிவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே
இரும்புற நீறு மாடிக் கலந்திடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும்
5மங்கல மகளிரொடு மாலை சூட்டி
இன்குர லிரும்பை யாழொடு ததும்பத்
தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து
மண்மழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங்
கிருங்கடற் றானை வேந்தர்
10பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே.

(பி - ம்.) 3 ‘இரும்புக நீருமாடிக்கலத்திடை' 4 ‘குரம்பைக் கூன ராக்கினுங்கிடக்கு' 5 ‘சூடி' 6 ‘லிகும்பை யாழெடுத்தியம்ப', ‘யிரும் பெயர்' 8 ‘சொல்லினுஞ்', ‘செல்லுங்கண்ணுறின்', ‘செல்லுமாங்கு கடற்றானை'

திணையும் துறையும் அவை.

விரியூர் நக்கனார் (பி - ம். விரியூக நக்கனார்)


(கு - ரை.) 3. நீறு - புழுதி.4. குரம்பை - சிறுகுடிலின்.

6. குரல் - மகளிர் இசை. இரும் பை - பெரிய பை ; யாழுறை. ததும்ப - ஒலிக்க.7. படு - மடு.

10. செலவு ஆனாது - செல்லுதல் தவிராது.

மு. பாடாண்டிணைத்துறைகளுள், ‘மாணார்ச்சுட்டிய வாண்மங்கலம்' என்பதற்கு இதனை மேற்கோள் காட்டினர் இளம்பூரணர் (தொல். புறத்திணை. சூ. 30) ; உழிஞைத்திணைத்துறைகளுள் ‘வென்ற வாளின் மண்ணல்' என்பதற்கு ‘ஒன்றெனமுடித்தலான் இருவர்வேற்குஞ் சிறுபான்மை மண்ணுதல் கொள்க' என விசேடவுரை கூறி இதனை மேற்கோள் காட்டினர் நச்சினார்க்கினியர்; தொல்.புறத்திணை. சூ. 13.

(332)