(கு - ரை.) 1. “நளியிரு முந்நீர்”(புறநா. 35 : 1; மணி. 12 : 92) 1-2. முற்காலத்திற் சோழனொருவன்கடலிற் காற்றை ஏவல் கொண்டமை, “வாத ராசனைவலிந்துபணி கொண்டவவனும்” (கலிங்கத். இராச.16) என்பதனாலும் விளங்குகின்றது. 4. புறநா. 242 : 4. 3-8. வெண்ணி-சோழநாட்டில் நீடாமங்கலத்திற்குமேற்கேயுள்ள ஓர் ஊர். அது தேவாரம் பெற்றஸ்தலங்களுள்ஒன்று. கோயில் வெண்ணி (கோவிலுண்ணி) என இக்காலத்துவழங்கும். அவ்வூரையும் அதனைச் சூழ்ந்துள்ள இடங்களையும்பார்க்கையில், அந்த இடம் பண்டைக்காலத்தில்மிகப்பெரிய நகராக இருந்திருக்க வேண்டுமென்றுதோற்றுகின்றது. அகநா. 55 : 10 - 15 : “காய்சின மொய்ம்பிற்பெரும்பெயர்க் கரிகால், ஆர்கலி நறவின் வெண்ணிவாயிற், சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்......வேந்தர்சாய,மொய்வலியறுத்த ஞான்றை” (அகநா. 246 : 8 - 13);“இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை, அரவாய்வேம்பி னங்குழைத் தெரியலும், ஓங்கிருஞ்சென்னி மேம்படமிலைந்த, இருபெரு வேந்தரு மொருகளத் தவிய, வெண்ணித்தாக்கிய வெருவரு நோன்றாட், கண்ணார் கண்ணிக் கரிகால்வளவன்”(பொருந. 143-8) (66)
1. பாட்டுடைத்தலைவன் பெயர் 3-ஆம்அடியில் வந்துள்ளது. 2 “வாயுவினை நோக்கியுள மாண்டவினைநாவாய்” (குண்டலகேசி)
|