(கு - ரை.) 1. ‘நளியிரு முந்நீர்’ என்பது செறிவு; நேமி.சொல். 59, உரை. ‘ஏணியில் - எல்லையில்; நளியிரு முந்நீ ரேணி யாகவென்றார்’ (சிலப்.23 : 165, அரும்பத.) 3. புறநா.2 : 1, குறிப்புரை. 2-3. “வான்கவிந்த வையகம்” (நாலடி.80) 4. மு. பொருந.54; பெரும்பாண்.33; “முடியுடைவேந்தர் மூவருள்ளும், தொடிவிளங்கு தடக்கைச் சோழர்” (சிலப்.10 : கட்டுரை, 1-2) 4-5. “முரசுமுழங்கு தானை....நினதே பெரும என்புழி மூவிருள்ளுமென முன்னிலையாகற்பாலது மூவருள்ளுமெனப் படர்க்கையாய வழி அமைதலும்”, “முரசு முழங்குதானை.....பெரும என்புழி மூவிரென்னாதது என்னையெனின் புலவன் கூறுகின்ற இவனை ஒழிந்த இருவகைக் குலத்தோரும் இவன் முன்னுள்ளோரும் படர்க்கையராதலின், அம்மூவகைக் குலத்துள்ளோரையுங் கூட்டி முரசுமுழங்குதானை மூவர் அரசுள்ளும் அரசென்று ஈண்டுச் சிறப்பித்துச் சொல்லப்படுவது அச்சோழர்வழித்தோன்றிய நின்னரசே யென்றானெனப்பொருள் கூறுக” (தொல்.எச்ச. சூ. 67, சே.; ந.) அரசனது தன்மையெனப் பாவத்தன்மையை யுணர்த்தும் உகரவீற்றுப் பாவதத்திதன் என்று இப்பகுதியை மேற்கோள் காட்டினர்; பிரயோக.34. 6-8. புறநா.117 : 2, 388 : 1-2; “கல்காயுங் கடுவேனிலொ, டிருவானம் பெயலொளிப்பினும், வரும்வைகன் மீன்பிறழினும், வெள்ளமாறாது” (மதுரைக.்106-9), “வசையில் புகழ் வயங்கு வெண்மீன், திசை திரிந்து தெற்கேகினும், தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன் மாறி, வான்பொய்ப்பினுந் தான்பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி” (பட்டினப்.1-6), “கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்....காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை” (சிலப்.10 : 102-8), “காவிரியென்னத்தப்பாக் கருணையான்” (வி. பா.அருச்சுனன்றவநிலை 24), “வற்றாதகாவிரி” (தக்க.812) 9-10. ‘கரும்பின், வேல்போல் வெண்முகை பிரிய’ (நற்.366); “வேலீண்டு தொழுதி யிரிவுற் றென்ன” (மலைபடு.116) 11. “தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணாவதுஞ் சோழ மண்டலமே” (சோழமண்டல சதகம்) என்னுஞ் செய்யுள் இங்கே அறியத்தக்கது. 1-11. “நளியிரு முந்நீ ரேணி யாக என்னும் புறப்பாட்டினுள், ‘முரசுமுழங்கு...பெரும’ எ - ம், ‘ஆடுகட்....அத்தை’ எ - ம் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர்” (யா. வி.எழுத். 1) 13. நினவ - நினக்கு உரியன; “நினவ கூறுவலெனவ கேண்மதி என்றாற்போல ஆறாவதற்குரிய அகரவுருபின் முன்னரும் ஓர் அகரவெழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாகக் கருதினர்” (தொல்.புணர். சூ. 13, ந.) “எனவ கேண்மதி” (அகநா.379 : 5) 15-6. “முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டினர்க் கருளி” (பெரும்பாண்.443-4); “காட்சிக்கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன், மீக்கூறு மன்ன னிலம்”, ‘முறைவேண்டினார்க்குங் குறைவேண்டினார்க்குங் காண்டற் கெளியனாய்’ (குறள்,386, பரிமேல்.) என்பவற்றில் இவ்வடிகளின் சொல்லும் பொருளும் அமைந்திருக்கின்றன; “முறைகோடி மன்னவன் செய்யி னுறை கோடி, யொல்லாது வானம் பெயல்” (குறள்,559), “வெஞ்சினவேந்தன் முறைநெறியிற் சேர்தலும்.....திங்கண்மும் மாரிக்கு வித்து” (திரி.98) என்பவை இங்கே அறியற்பாலன. 17. கொண்மூ - நீரைக்கொள்ளுதலையுடையது; காரணப்பெயர். 18. மாகவிசும்பு - ஒருபொருட் பன்மொழி; திக்குகளையுடைய ஆகாயம் என்பர் நச்சினார்க்கினியர்; பரி.1 : 47; அகநா.253 : 24; மதுரைக்.454. 19-21. புறநா.60 : 11 - 2; “உலகுட னிழற்றிய தொலையா வெண்குடை” (அகநா.204); “திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும், கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ், வங்க ணுலகளித்த லான்” (சிலப்.1 : 1 - 3); “ஏமவெண்குடை”, “வெயிலழல் கவியாது வியலக வரைப்பின், உயிரழல் கவிக்கு முயர்ச்சித்தாகிப், பூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை” (பெருங்.1. 36 : 104, 42 : 44 - 6) “தீதுதீர் மதுரை” (சிலப்.15 : 9 - 10) என்பதன் விசேடவுரையில் அடியார்க்குநல்லாரால்இப்பகுதி மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது. இங்ஙனம் குடையை உயர்த்துக் கூறுதல், ‘நடைமிகுத்தேத்திய குடைநிழல் மரபு’ என்னுந் துறையின் பாற்படுமென்றும், இங்ஙனம் புகழ்தல் குடியைப் புறங்காத்தற்கு அறிகுறியாக இக்குடையை யான் கொண்டேனென்று அரசனாற் குறிக்கப்படுதலின் என்றுங் கூறுவர் (தொல்.புறத்திணை. சூ. 36) நச்சினார்க்கினியர். 22. வெளிற்றுப்பனை : உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தின்முன் அல்வழியில் வல்லின றகரம் இரட்டினமைக்கு மேற்கோள்; நன்.சூ. 182, மயிலை. 24. “ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்து” (பெரும்பாண்.419) 25-6. வீரர்கள் அரசனுக்கு வெற்றிதருதற்குக் காரணம் உழவென்பதை, “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழலவர்” (குறள்.1034) என்பதாலும், அதற்குப் பரிமேலழகர் எழுதிய “குடைநீழலென்பதூஉம் ஆகுபெயர்; ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே’ என்றதனால் தம்மரசனுக்குக்கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக்கண்டிருப்ப ரென்பதாம்” என்னும் உரையாலும், “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர்” (சிலப்.10 : 149 - 50) என்னும் அடிகளாலும் உணர்க. 30. மு. புறநா.121 : 5. 31. நொதுமலாளர் - அயலார் : நொதுமல் - அயல்; இங்கே கோள் கூறுவாரை உணர்த்தியது, ‘தீயென்னும் பாம்பு செவியிலொரு வற்கவ்வ, மாயுமே மற்றை யவன்” என்னும் செய்யுள் இங்கே அறிதற்பாலது. 32. பகடுபுறந்தருதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 16, இளம். 33. “சாலக், குடியோம்பல் வல்லா னரசன்” (திரி.13) “கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி, புண்ணியத்தின் பாலதே யாயினும்-தண்ணளியான், மன்பதை யோம்பாதார்க் கென்னாம்” (நீதிநெறி.28) 32-3. “குடிபுறந் தருநர் பார மோம்பி” (பதிற்.13 : 24) “வீழ்குடி-காணியாளர்; பகடு......தருகுவையாயின்’ என்றார் பிறரும்” (சிலப்.5 : 43 - 5, அடியார்.); வேளாளர் உழுதுண்டதற்கு மேற்கோள் : தொல்.அகத்திணை. சூ. 30, ந. 32-4. “உற்றதற் கெல்லா முரஞ்செய்தல் வேண்டுமோ, கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையு, நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை, தற்செய்யத் தானே கெடும்” (பழ.83); “வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும், பகைவர்கட் பட்ட செருக்கு” (குறள்,878) மு.“நளியிரு முந்நீர்.......அடங்காதோரே; இஃது இஞ்ஞாலம் இயற்கை யல்லது தமது செயற்கையிற்றோன்றினும் காவலனைப் பழிக்கும்; இதனையு முணராதே நீ வேற்றரசர்க்குப் பெறுதற்கரிதாகிய சிறந்த நாட்டினை நினதாகப் பெற்றுவைத்தும் அதனை யழிக்கின்றது நினக்கு அரசியலன்றென்று அவனாட்டை யழித்தமை கூறுதலில், துகளொடு புணர்வும், குடிபுறந்தரின் நினக்குச் செல்வம் முதலிய சிறத்தலிற் பகைவர் நின்னை வணங்குவரெனப் பொருளொடு புணர்வும் வெளிப்படக் கூறலிற் செம்பொருட்செவியுறை அங்கதமாயிற்று” (தொல்.செய். சூ. 128, ந.) (35)
|