296
வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும்
எல்லா மனையுங் கல்லென் றனவே
வெந்துடன் றெறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே.

(பி - ம்.) 1 ‘படரவும்’ 3 ‘கல்லென்றவ்வே’4 ‘கொல்லென’ 5 ‘தன்றாநெடுந்’

திணை - வாகை; துறை - ஏறாண்முல்லை.

வெள்ளைமாளர்.


(கு - ரை.) 1. சினை - தழையையுடையகிளையை. காஞ்சி - காஞ்சிப்பண்; புறநா. 281 : 5.

2. ஐயவி - வெண்சிறுகடுகு; “ஐயவிபுகைப்பவுந் தாங்காது” (புறநா. 98 : 15)

1 - 2. புண்பட்டோரைப் பேய்கள்அணுகாதிருத்தற் பொருட்டு வேப்பந்தழையை வீட்டின்முன்இறப்பிற் செருகுதலும் காஞ்சிப் பண்ணைப்பாடுதலும் ஐயவியைப் புகைத்தலும் மரபு : புறநா. 98: 15, 281 : 1 - 6.

5. நெடிது - நெடுநேரம்.

போர்க்குச் சென்ற ஏனைவீரர் தம்மிடத்தைஅடைந்தும் ஒருவீரன் வாராமலிருக்க அவன் தேர்மட்டும்தாமதித்து வந்ததைக் கண்ட அவன் தாய் கூறியது; கண்டோர்கூறியதுமாம்.

(296)