317
வென்வேல்.......................................................நது
முன்றிற் கிடந்த பெருங்களி யாளற்
கதளுண் டாயினும் பாயுண் டாயினும்
யாதுண் டாயினுங் கொடுமின் வல்லே
5வேட்கை மீளப. . . . . . .
....................கு மெமக்கும் பிறர்க்கும்
யார்க்கு மீய்ந்து துயிலேற் பினனே.

(பி - ம்.) 7 ‘துயலேற்பினனே’

திணையும் துறையும் அவை.

வேம்பற்றூர்க் குமரனார் (பி -ம். வேப்பத்தூர்க்குமரன்)


(கு - ரை.) 2. முன்வாயிலிற் படுத்துக்கிடந்தமிக்க களிப்பினை யுடையானுக்கு.

3. அதள் - தோல். இதிற் சிலசாதியார்படுத்தல் இயல்பு; அது, “மான்றோற் பள்ளி மகவொடுமுடங்கி” (பெரும்பாண். 89), “உழைய தட்பள்ளி,உவலைக் கண்ணி வன்சொ லிளைஞர்” (மதுரைக்.310 - 11), “வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழைத்,தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை” (அகநா.58 : 4 - 5), “சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற்சிறுதுயிலே” (திருச்சிற். 398) என்பவற்றாலும்அறியலாகும்.

4. வல்லே - விரைவாக.

7. துயிலேற்பினன் - துயிலேற்றலையுடையான்.ஆதலால் அக்களி யாளனுக்கு யாதுண்டாயினும் வல்லேகொடுமினென்க. (317)