திணையும் துறையும் அவை. ................................ (பி - ம்.) 3 ‘தம்மொடு’ திணையும் துறையும் அவை. -------------------------- (இ - ள்.) கலம் வனையும் வேட்கோவே!கலம் வனையும் வேட்கோவே! சகடஞ் செலுத்தும்உருளின்கண் ஆரத்தைப் பொருந்திவந்த சிறிய வெளியபல்லிபோல் நெருநலை நாளாற் பலசுரமும் தன்னோடுகழிந்துவந்த எமக்கும் அருள்பண்ணி (யாமும் அவனோடேகூடியிருக்கும் படி) பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக்காட்டின்கண் முதுமக்கட்டாழியை இடமுடைத்தாக வனைவாயாக,பெரிய இடத்தினை யுடைய பழைய ஊரின்கட் கலம் வனையும்வேட்கோவே!- எ - று. ‘எமக்கும்’ என்றது பன்மையும்தலைமையும் கருதாது மயங்கக் கூறி நின்றது. ‘கோவே! கோவே! மூதூர்க்கலஞ்செய்கோவே! எமக்கும்அருளி அகலிதாக வனைகவெனக்கூட்டுக. அடுக்கு, விரைவின்கண் வந்தது. |