307
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்று முதுக்காண்
வேனல் வரியணில் வாலத் தன்ன
5கான வூகின் கழன்றுகு முதுவீ
அரியல் வான்குழற் சுரியற் றங்க
நீரும் புல்லு மீயா துமணர்
யாருமி லொருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பக டேய்ப்பத் தெறுவர்
10பேருயிர் கொள்ளு மாதோ வதுகண்டு
வெஞ்சின யானை வேந்தனு மிக்களத்
தெஞ்சலிற் சிறந்தது பிறிதொன் றில்லெனப்
பண்கொளற் கருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யானே.

(பி - ம்.) 3. ‘வம்பல போலத்’7 ‘மீயா துமன்ற’ 9 ‘தெறுவவர்’, ‘தெறுவா’ 10 ‘பேருயிர்க்’‘மாதோவ......கெகள’

திணை - தும்பை; துறை - களிற்றுடனிலை.
................................................


(கு - ரை.) 1. மு. புறநா. 235 : 17; குறுந். 176 ; பற்றுக்கோடாகிய என் தலைவன் எங்கேஉள்ளானோ?

2. பாட்டோனென்பது சுட்டுப்பொருளது.

3. வம்பலன் - அயலான். உதுக்காண் -அவ்விடத்தே பார்; ‘’எவன்விரைந்து சேறியுதுக்காண்” (கலித். 108, : 39)

4. வேனல் - வேனிற்காலம். வரியணில்- முதுகில் மூன்று வரிகளையுடைய அணிற்பிள்ளை; “மூவரியணில்” (தொல். மரபு. சூ. 6) வாலம் - வால்.

5. ஊகு - ஊகம்புல். வீ - பூ; எழுவாய்.

4 - 5. அணில்வால் ஊகம்புல்லிற்குஉவமை.

7. உமணர் - உப்புவாணிகர்.

8. யாருமில் ஒருசிறை - ஒருவரும் இல்லாதஒருபக்கத்தில்.

9. பகடு - எருது. தெறுவர் - பகைவர்.

10. பெரிய உயிர்களைக்கவருகின்றான்.

பட்டோன் (2) பேருயிர் கொள்ளும்(10)

மு. தும்பைத்திணைத்துறைகளுள்,‘களிறெறிந் தெதிர்ந்தோர்பாடு’ என்றதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம்.

(307)