(கு - ரை.) 1. புலியினிடத்தேஅகப்பட்ட ஆமானினது கன்றினுக்கு. 2. மூதா - முதிய பசு. மடுத்து - சேர்த்து. 4. சுரக்கும் - இடைவிடாமல்அளிக்கும். 7. வேலும் உறையும்: “நெய்துடைத்தடையலர் நேய மாதர்கண், மைதுடைத் துறைபுகும் வயங்கொள்வேலினாய்” “பொய்யுரைத் துலகினிற் சினவினார்குலமறப் பொருது தன்வேல், நெய்யுரைத் துறையினிட்டு”(கம்ப. நகர்நீங்கு. 159; யுத்த. மந்திர. 84.) 5 - 7. ‘பெயர்நிலைக் கிளவியினாஅ குநவும்’ என்பதற்குத் தத்தம் பொருளுணர்த்தாதுபெயர்ந்த நிலைமையையுடைய சொல்லான் வருஞ் செய்யுளுமெனப்பொருள்கூறி,‘ஒள்வாட......வேலோனூரே : என்புழி, வேலோனென்பது வேலையுடையோனென்னும்பொருள் பெயர்ந்து ஒரு பெயர்த்தன்மையாய் நின்றது’என்பர்; தொல். எச்ச. சூ. 53, ந.; இ. வி.சூ. 370, உரை. (323)
|