327
எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாண ருண்டுகடை தப்பலின்
5ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
வரகுகட னிரக்கு நெடுந்தகை
அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே.

(பி - ம்.) 2 ‘சில்வினை' 4 ‘ருண்டுகன....தலொற்கஞ்' 7 ‘வரகு கடனீர்க்கு'

திணையும் துறையும் அவை.

............................................


(கு - ரை.) 1. கடாவிடுதலின்றி இளைஞர் அடித்த.
‘எருதுகாலுறாஅது' என்பது : தொல். மொழி. சூ. 8, இளம்.மேற்.

2. சில்விளை - சிலவாக விளைந்த. குப்பை - பொலி.

3. தொடுத்த கடவர்க்கு - தன்னை வளைத்துக்கொண்ட கடன்காரர் களுக்கு ; "தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கும்" (புறநா. 156 : 4) கொடுத்த மிச்சில் - கொடுத்து மிஞ்சிய வரகை.

4. கடை - வாயில்.

5. ஒக்கல் ஒற்கம் சொலிய - சுற்றத்தாருடைய வறுமையை ஒழித்தற்கு.

'ஒற்கம்' என்னும் உரிச்சொல் வறுமையாகிய குறிப்புணர்த்துவதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ. 64, சே.; சூ. 62, ந.; இ. வி.சூ. 281, உரை.

7-8. "வேந்துதலை வரினுந் தாங்கும், தாங்கா வீகை நெடுந்தகை" (புறநா.325 : 14 - 5)

மு. வாகைத்திணைத்துறைகளுள், ‘புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம்' (தொல். புறத்திணை. சூ. 17, இளம்.) என்பதற்கும், ‘அரும்பகை தாங்குமாற்றல்' (தொல்.புறத்திணை. சூ. 21, ந.) என்பதற்கும் மேற்கோள்.

(327)