328
.டைமுதற் புறவுசேர்ந் திருந்த
புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
வரகுந் தினையு முள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக் கீயத் தொலைந்தன
5........................டமைந் தனனே
அன்ன னாயினும் பாண நன்றும்
வெள்ளத் திடும்பா லுள்ளுறை தொட....
களவுப் புளியன்ன விளை....................
.......................... வாடூன் கொழுங்குறை
10கொய்குர லரிசியொடு நெய்பெய் தட்டுத்
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோ
றுண்டினி திருந்த பின்...........................
..................................தருகுவன் மாதோ
தாளிமுத னீடிய சிறுநறு முஞ்ஞை
15முயல்வந்து கறிக்கு முன்றிற்
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.

(பி - ம்.) 1. ‘சோர்ந்திந்த' 4 ‘கீயாததா....டமைந்த' 6 ‘மன்ன நன்றும்' 7 ‘வெள்ளத்தீடும்' 14 ‘தாழிமுதல்'

திணையும் துறையும் அவை (பி - ம். இதுவுமது)

பங்கு.................................................................


(கு - ரை.) 1. புறவு - முல்லைநிலம். 2. புன்புலம் - புன்செய்.

3 - 4. "வரகுந் தினையு முள்ளவை யெல்லாம், இரவன் மாக்க ளுணக்கொளத் தீர்ந்தென" (புறநா.333 : 9 - 10)

7. "குடப்பாற் சில்லுறை" (புறநா.276 : 5)

8. களவுப்புளி - களாப்பழத்தின் புளிப்பு. 10. குரல் - கதிர்.

14. தாளி - ஒருவகைக் கொடி. செலின் (16) தருகுவன் (13)

14 - 5. புறநா.320 : 1.

(328)