(கு - ரை.) 1. புலம் - மேய்தற்குரிய நிலம். 2. அசைவிட - அசையிட. 1 - 2. ஏறு அசைவிட. 3. பூப்பறிக்குந்து - பூக்களைப் பறிக்கும் ; "புதன்முல்லைப் பூப்பறிக்குந்து" (புறநா.352 : 4) 4. கோலாலெறிந்த முயல் ; "மாலை வெண்காழ் காவலர் வீச, நறும்பூம் புறவி னொடுங்குமுய லிரியும்" (ஐங்குறு.421) 5. உகளுந்து - துள்ளும். 6. தொடலை - மணிக்கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை. 8. பூக்குறூஉந்து - பூக்களைப் பறிக்கும் ; குறுதல் - பறித்தல். 12. அமரியளாகி - விரும்பியவளாய். 13. முறம்போலும் காதுகளையுடைய யானை ; "முறஞ்செவி வாரணம்" (கலித்.42 : 2 ; சிலப். 10 : 248) ; "முறஞ்செவி யானையுந் தேருமாவும்" (மணி. 19 : 121) (339)
|