340
அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக்
குரலங் குன்றி கொள்ளு மிளையோள்
மாமகள்..................................................................
...................................................லென வினவுதி கேணீ
5வெடுப்பவெ..................................
.............................மைந்தர் தந்தை
இரும்பனை யன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.

(பி - ம்.) 1 ‘தழைத் துடங்க’, ‘பணிப்பொரி’ 2 ‘கூறலங்குன்றி’ 5 ‘யொடுப்ப’ 7 ‘மிகுபனை’, ‘இருபனை’

திணையும் துறையும் அவை.

அ. ...............................................


(கு - ரை.) 1. தழை - தளிர்களாலும் பலவகைப் பூக்களாலும் அமைக்கப்பட்ட ஒருவகை ஆடை ; "அம்பூந் தொடலை யணித்தழை" (புறநா. 341 : 2) ; "தழையுங் கோதையு மிழையு மென்றிவை, தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும், மடமொழி யாயத் தவருள்" (கலித். 102 : 5 - 7)

2. குரலங்குன்றி - குன்றிமணிக் கொத்தினை.

7. "பனைக்கை மும்மத வேழ முரித்தவன்" (தே. திருநா. கோயில். ‘பனைக்கை’ 1 )

8. கரந்தை - ஒருவகைப்பூடு. செறு - வயல்.

7 - 8. "காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானை" (பதிற். 40 : 5 - 6)

(340)