361
காரெதி ருருமி னுரறிக் கல்லென
ஆருயிர்க் கலமரு மாராக் கூற்றம்
நின்வர வஞ்சலன் மாதோ நன்பல
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்
5கருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத்
தாயினன்று பலர்க்கீத்துக்
தெருணடை மாகளிறொடு தன்
அருள்பாடுநர்க்கு நன்கருளியும்
உருணடை................ான்றதன்
10தாள்சேருநர்க் கினிதீத்தும்
புரிமாலையர் பாடினிக்குப்
பொலந்தாமரைப் பூம்பாணரொடு
கலந்தளைஇய நீளிருக்கையாற்
பொறையொ........மானோக்கின்
15வில்லென விலங்கிய புருவத்து வல்லென
நல்கி னாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்
அல்கு றாங்கா வசைஇ மெல்லென
...................பொலங்கலத் தேந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி யிகழ்விலன்
20நில்லா வுலகத்து ............. மைநீ
சொல்ல வேண்டா.........முந்தறிந்த
..........................................................
....................................................னார்.

(பி - ம்.) 7 ‘தனறாளபாடுநாககு’ 13 ‘கலந்தலைஇய’ 15 ‘விலங்கிய வுருவத்து’


(கு - ரை.) 2. உயிர்க்கு - உயிரைக் கைக்கொண்டு செல்லுதற்கு. ஆரா - தெவிட்டாத. கூற்றம் : விளி.

3. அஞ்சலன் - அஞ்சான். 5. கலம் - ஆபரணம். நீர் - தாரைநீர்.

4 - 5. "ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப், பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து" (புறநா.367 : 4 - 5)

6. நன்று - மிக. 7. மா - குதிரையை.

12. பொலந்தாமரை - பொற்றாமரை.

13. இருக்கையால் - இருக்கையின்கண்.

15. வல்லென - விரைய; வற்கெனவுமாம். 16. நல்கின் - பேசின்.

15 - 6. பல்லின் கூர்மைக்கு அஞ்சி நா விரையப் பேசாதென்பது; "அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த, வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவை" (குறுந்.14)

(361)