347
உண்போன் றானறுங் கள்ளி னிடச்சில
நாவிடைப் பஃறேர் கோலச் சிவந்த
ஒளிறொள வாடக் குழைந்தபைந் தும்பை
எறிந்திலை முறிந்த கதுவாய் வேலின்
5மணநாறு மார்பின் மறப்போ ரகுதை
குண்டுநீர் வரைப்பிற் கூட லன்ன
குவையிருங் கூந்தல் வருமுலை சேப்ப
..............................................................................
வென்னா வதுகொ றானே........
10விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப
வேர்துளங் கினநம் மூருண் மரனே.

(பி - ம்.) 2 ‘பஃறொகொலச்’ 4 ‘கதுவாய்நேமி’, ‘கதுவாய்வாளர்’ 5 ‘ரஃதை’ 7 ‘வருமுமம வேநதாவினை நவிலயானை பிறணிப்ப’ ‘மணநாறு மாரபின மறபபொராலைசெபப’ 12 ‘மூருனைமானே’

திணையும் துறையும் அவை.

கபிலர்.


(கு - ரை.) 4. கதுவாய்வேல் - வடுப்பட்ட வேல் ; "கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு" (புறநா.353 : 15)

5. அகுதை : ஓர் உபகாரி ; புறநா. 233 ; 3, குறிப்புரை.

6. கூடல் - மதுரை. 9. மு.புறநா.345 : 19.

12 - 3. யானை கட்டின மரம் ; புறநா. 345 ; 1, 348 : 8 - 9.

(347)