(பி - ம்.) 1 ‘குறையிறை’ திணை - அது; துறை - இயன்மொழி.அவனை அவர் பாடியது. (இ - ள்.) குறிய இறப்பையுடைய சிறிய மனையின்கட் குறமக்கள் வளைந்த மூங்கிற்குழாயின்கண் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து வேங்கைமரத்தையுடைய முற்றத்தின்கட் குரவைக்கூத்தையாடும் இனிய சுளையையுடைத்தாகிய பலாமரத்தையுடைய பெரிய மலையை யுடையோன், ஆயாகிய அண்டிரன், கொல்லும் போரைச் செய்யும் தலைவன், அவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத் தொகை போல, மேகம் மறைத்தலின்றி ஆகாயம் பலமீனையும் பூக்குமாயின் அமையாது, ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாகப் பெருக வெண்மையைச் செய்யுமாயின் அம்மீன்றொகை அதனுக்குத் தப்பாது-எ - று. யானையிற் பிழையாதென இயையும். மன் : அசை. |
(கு - ரை.) 2. "தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தி" (பதிற். 81 : 21); "நெடுங்க ணாடமைப் பழுநிக் கடுந்திறற், பாப்புக் கடுப்பன்ன தோப்பி", "அம்பணை விளைந்த தேக்கட் டேறல்" (அகநா. 348, 368); "நீடமை விளைந்த தேக்கட் டேறல்" (முருகு. 195) 1 - 3. தேறலுண்டு குரவையாடுதல் : புறநா. 24 : 4 - 6; "மன்ற வேங்கை மணநாட் பூத்த, மணியே ரரும்பின் பொன்வீ தாஅய், விய லறைவரிக்கு முன்றிற் குறவர் மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்" (அகநா. 232 : 6 - 10); "வாங்கமைப் பழுனிய நறவுண்டு, வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே" (நற். 276 : 9 - 10) "நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு, மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென, வான்றோய் மீமிசை யயருங் குரவை" (மலைபடு. 320 - 22) 6. பரிசிலர்க்கு யானை கொடுக்கப்படுதலை, புறநா. 130, 131, 135, 140, 151-ஆம் பாட்டுக்களாலும், "இரவலர் வரூஉ மளவை யண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை போல" (நற். 237), "துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு, பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென" (பொருந. 125 - 6), "குன்றா கியபொன்னும் வேழக் குழாமுங் கொடை புகழ்ந்து, சென்றார் முகக்கும்" (தஞ்சை. 149) என்பவற்றாலும் அறிக. (129)
|