241
திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப் புறு முரசங் கறங்க
5ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.

திணையும் துறையும் அவை.

1 அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடியது.

(இ - ள்.) திண்ணிய தேரைஇரவலர்க்கு ஈத்த குளிர்ந்தமாலையை யுடைய ஆய்வருகிறானென்று ஒள்ளிய தொடியினையும் வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனதுகோயிலுள்ளே போர்த் தலுற்ற முரசம் முழங்க வானத்தின்கண்ஓசை தோன்றிற்று- எ - று.

இப்பெற்றிப்பட்ட வள்ளியோனைவானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு.

இது தற்குறிப்பேற்றமென்பதோர்அணிப்பொருட்டாய் நின்றது.


(கு - ரை.) 3 - 4. ‘’வச்சிரக்கோட்டத்து மணங்கெழு முரசம்” (மணி. 1 :27)

(241)


1 ”மோசி பாடிய வாயும்” (புறநா.158 : 13)