(கு - ரை.) 2. மண்டை - பிச்சைப் பாத்திரம்; புறநா. 103 : 3, குறிப்புரை. 3. "அடர்பொற் சிரகத்தால் வாக்கி" (கலித். 51 : 7); வடியுறு தீந்தேறல் வாக்கு" (பு. வெ. 19). உக்க - சிந்திய. 2 - 3. "வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு" (புறநா. 261 : 2). 2 - 4. "தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன், பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச், சேறுசெய் மாரியி னளிக்குநின், சாறுபடு திருவி னனைமகி ழானே" (பதிற். 65 : 14 - 7) 5 - 6. பகைவர்க்கு இன்னான் : புறநா. 12 : 4, 59 - 6. வேந்தர்க்கு இன்னான் என்றமையால், இரவலர்க்கு இனியோன் என்பது பெறப்பட்டது. (115)
|