திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - தும்பை; துறை - பாண்பாட்டு) அவனை அவர் பாடியது. (இ - ள்.) அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக ; யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஒருபயன்படாமையின் அவை யல்லவாக; நடப்பட்ட கல்லின்கட் பீலியைச் சூட்டி 1நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய கலத்தான் உகுப்பவும் அதனைக் கொள்வனோ, கொள்ளானோ சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று. நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்துகுப்பவும் கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. |