திணை - அது; துறை - பரிசில்விடை. தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக்காடுபற்றியிருந்த குமணனைக் கண்டு அவன் தன்வாள்கொடுப்பக்கொண்டுவந்து இளங்குமணற்குக் காட்டிப் பெருந்தலைச்சாத்தனார்பாடியது. பரிசில் விடையாவது :- “வேந்தனுண் மகிழ வெல்புக ழறைந்தோர்க் கீந்து பரிசி லின்புற விடுத்தன்று." (பு. வெ. 214) (இ - ள்.) எப்பொருளும்நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக்கருதினோர் தம்முடைய புகழைப் பூமியிடத்தே நிறுத்தித்தாங்கள் இறந்தார்; நணுகுதற்கரிய தலைமையையுடையமிக்கசெல்வர், வறுமையால் இரப்போர்க்குக் கொடாமையிற்பழைய வண்மையையுடைய மாக்கள்போலப் பின்னும் தம்பெயரைநிறுத்தி உலகோடு தொடர்ந்து போதுதலை அறியார்;தாளின்கண் தாழ்ந்த ஓசையையுடைய மணி ஒன்றற்கொன்றுமாறியொலிக்கும் புகர்நுதலையுடைய வென்றியியன்றயானையைப் பாவலர்க்கு மிகக்கொடுக்கும் அழிவில்லாதநல்ல புகழையுடைய வலிய குதிரையையுடைய தலைவனைப்பாடிநின்றேனாக, பயனின்றியே பெருமைபெற்ற பரிசிலன்வாடினனாகப் பெயர்தல் எனது நாட்டை இழந்ததனினும்மிக இன்னாதென நினைந்து வாளைத் தந்தான், தனதுதலையை எனக்குத் தருவானாக, ஆங்குத் தருதற்குத் தன்னிற்சிறந்த பொருள் வேறொன்றில்லாமையின்; வென்றிமிக்கஉவகையான் வந்தேன், புறக்கொடாத மேற்கோளையுடையநின் தமையனைக் கண்டு-எ - று. வருவலென்பது காலமயக்கம். மன்னுதல்குறித்தோர்புகழ்நிறுத்துதலும், புகழ்நிறுத்தாதோர் மன்னாராதலும்இவ்வாறன்றோ வென்பது கருத்தாகக் கொள்க. நின் கிழமையோற்கண்டுவருவலெனவும், வயமான் தோன்றலைப் பாடி நின்றேனாகப்பரிசிலன் கொன்னே பெயர்தல் இழந்ததனினும் இன்னாதெனத்தன்னிற்சிறந்தது பறிதொன்றின்மையின், தலை எமக்கீயவாள்தந்தனன் ஆதலால், ஆடுமலியுவகையின்வருவலெனவும் கூட்டுக. ‘கிளைமையோற் கண்டு’என்று பாடமோதுவாரும் உளர். |
(கு - ரை.) 1. ‘மன்னாமை’ என்பதுநிலையாமையை யுணர்த்துவதற்கு மேற்கோள்; தொல்.கிளவி. சூ. 34, ந. 2. “தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந்தனரே” (புறநா. 366 : 5) 1 - 2. புறநா. 18 : 3; “நின்றுநீகெடாஅ நல்லிசை நிலைஇ” “நல்லிசை நிலைஇயநனந்தலை யுலகத்து” (பதிற். 14 : 20 - 21, 86 : 5);“மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்,....சாவாவுடம்பெய்தினார்” (திரி. 16); “மண்ணியன்ஞாலத்து மன்னு புகழ்வேண்டிப், பெண்ணியனல்லாய்பிரிந்தார்” (கார். 8); “நில்லா வுலகத்துநிலைமை தூக்கி, அந்நிலை யணுகல் வேண்டி” (பெரும்பாண்.466 - 7); “தொலையா நல்லிசை யுலகமொடு நிற்ப”“இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப” (மலைபடு.70, 541); “ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின்யாத்த, உருவமும் புகழுமென்றாங் கவற்றினூழ் காத்துவந்து,மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்றை யாக்கை,திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்குமன்றே”,“பொன்று மிவ்வுட லின்பொருட், டென்று நிற்குமிரும்புக, ழின்று நீர்கழிந் தீர்களாற், குன்றின்மேற்குடை வேந்திர்காள்” (சூளா. சீயவதை. 204;அரசியல். 226); “மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்” (தஞ்சை. 21), “மாய்ந்தவர்மாய்ந்தவ ரல்லர்கண்மாயா, தேந்திய கைகொ டிரந்தவரெந்தாய்,வீந்தவ ரென்பவர் வீந்தவரேனும், ஈந்தவ ரல்லதிருந்தவர் யாரே” (கம்ப. வேள்வி. 30) 2 - 5. மலைபடு. 541 - 3. 6 - 7. புறநா. 72 : 3 - 4, குறிப்புரை. 11. “கடலங் கான லாய மாய்ந்தவென்,நலமிழந் ததனினு நனியின் னாதே” (குறுந். 245) 15. ஓடாப்பூட்கை : புறநா. 154 : 10,குறிப்புரை. மு. வாகைத் திணைத்துறைகளுள்‘இடையில் வான்புகழ்க்கொடை என்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 17, இளம்; சூ. 21, ந. (165)
|