368
களிறு முகந்து பெயர்குவ மெனினே
ஒளிறுமழை தவிர்க்குங் குன்றம் போலக்
கைம்மா வெல்லாங் கணையிடத் தொலைந்தன
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே
5கடும்பரி நன்மான் வாங்குவயி னொல்கி
நெடும்பீ டழிந்து நிலஞ்சேர்ந் தனவே
கொய்சுவற் புரவி முகக்குவ மெனினே
மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
10குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே யாங்க
முகவை யின்மையி னுகவை யின்றி
இரப்போ ரிரங்கு மின்னா வியன்களத்
தாளழிப் படுத்த வாளே ருழவ
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
15தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றிப்
பாடி வந்த தெல்லாங் கோடியர்
முழவுமரு டிருமணி மிடைந்தநின்
அரவுற ழார முகக்குவ மெனவே.

(பி - ம்.) 4 ‘கொடிஞ்சி’ 8 - 9 ‘மெயசிறைகதடு வாடுபெரும பிறிதாகி வழககறுத்த’ 11 ‘முவையினமையினறி’ 14 ‘காலகழிவனனவென’, ‘காலகழியனனவென்’ 16 ‘கொடியார்’ 17 ‘மிடைந்த நிரை யுறுமாரம’ 18 ‘அறையுறும்’, ‘மெனினே’

திணை - வாகை; துறை - மறக்களவழி.

சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கை (பி - ம். வெல்பஃறடக்கை)ப் பெருநற்கிள்ளியொடு போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரங்கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார்.


(கு - ரை.) 1 - 2. புறநா. 197 : 4, 369 : 24 - 7.

4. "செல்வுறு திண்டேர்க் கொடுஞ்சினை கைப்பற்றி" (கலித். 85 : 18)

7. சுவல் - பிடரி.

8. பெரும்பிறிது - மரணம்.

9. காற்றாற் போக்குதலொழிக்கப்பெற்ற கப்பல்போல."வழக்கு மாறு கொண்டு" (கலித். 101 : 11) என்பதற்கும், "வழக்கு நெறி மாயம்" (சீவக.2873) என்பதற்கும் இவ்வடி மேற்கோள்.

11. முகவை - முகந்துசெல்லும் பரிசில்; புறநா.369 : 27.உகவை - உகத்தல்.

13. வீரர்களாகிய வைக்கோற்போரைக் கடாவிட்ட வாளாகிய ஏரையுடைய வீரனே; புறநா. 371 : 15 - 6 "ஆளழி வாங்கி யதரி திரித்த, வாளே ருழவன்" (சிலப்.26 : 233 - 4)

14 - 5. கால்வழி - காலிடம்; காற்சுவடுமாம். தெடாரி - தடாரிப் பறை; புறநா. 376 : 4. தெளிர்ப்ப - ஒலிப்ப; "பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண், இரும்பறை", "பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப், புகர்முகம்" (புறநா.263 : 1 - 2, 371 : 19 - 20)

16. கோடியர் - கூத்தர்.

18. ஆரத்திற்கு அரவு உவமை; "விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு" (புறநா. 398 : 27)

(368)