(கு - ரை.) 1. புறநா. 152: 14. 2. குழிசி - இங்கே தயிர்கடையும்தாழி. இழுது-நெய். 8. புன்கண்மாலை : குறுந். 46 : 6.மலைமறைதல் : “மலைமறைந் தொளித்தி” (புறநா.8 : 8). சுடர் மலையில் மறைந்ததாகக் கூறுவது கவி மரபு. 9-11. புறநா. 66. 8; மேலுலகத்தைஅடைய விரும்பினோர் இவ்வுலக நுகர்ச்சியைத் துறந்துவிரதத்தால் உடலை மெலிவித்து யோகப் பயிற்சியால்உயிரை நீத்தற்குத் தாம் உறைந்த இடத்தைவிட்டுப் புண்ணிய திசையாகிய வடதிசையிற் சென்றுதங்குதலும், மீளாமல் நியமத்துடன் வடதிசையிற்செல்லுதலும் மரபு; அங்ஙனம் செல்லுதல் உத்தரகமனமென்றும், மகாப்பிரத்தான மென்றும் கூறப்படும் (புறநா.214, 216, 218; சிறுபஞ்ச. 73) ; கருத்து : “கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலைப், பொருதுபுண் ணாணியசேரலாத, னழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென, இன்னாவின்னுரை கேட்ட சான்றோர், அரும்பெற லுலகத் தவனொடுசெலீஇயர், பெரும்பிறி தாகி யாங்கு” (அகநா.55): “நிறக்கவல் லிரும்பைச் செம்பொனாம் வண்ணநிகழ்த்திய விரதமேநிகர்ப்பப், பிறக்கமும் வனமுமொழித்தவணமைத்த பெரும்பதிக் குவமையும் பெறாமல்மறக்கடுங் களிற்றுக் குபேரன்வாழளகை வடக்கிருந்தது”(வில்லி. பா. இந்திரப். 25); “வாணன்றென்மாறையில் வாழ், நின்றோகை கற்பி னிலைமையெண்ணாதெதிர் நின்று வென்னிட், டன்றோ வடக்கிருந்தாண்மடப் பாவை யருந்ததியே” (தஞ்சை. 374);போரில் தோல்வியுற்றோர் வடபாற்சென்றிருத்தல்மரபென்றுங் கூறுவர். (65)
1. இராவணனது மார்பில் திக்கயங்களின்கோடுகள் பாய்ந்து உருவின அடையாளத்தை இராமன்புறப்புண்ணென்று நாணிய செய்தி இங்கே நினைவுக்குவருகிறது; கம்ப. இராவணன்வதை. 207-ஆம் செய்யுள் முதலியவற்றைப்பார்க்க.
|