(பி - ம்.) 1 ‘ரோம்புற்றமன்’ 6 ‘ரெருத்தமடங்க’ திணை - அது; துறை - செவியறிவுறூஉ. அவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது. (இ - ள்.) நீ, பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது எதிர்நின்று அழித்து அவரைக்கொன்று அவர் மகுடமாகச் செய்யப்பட்ட பசும்பொன்னால் நினது அடிபொலிய வீரக்கழல் செய்து புனைந்த வலிய ஆண்மையையுடையை; வயவேந்தே! யாங்கள், நின்னை இழித்துரைப்போர் கழுத்திறைஞ்சப் புகழ்ந்துரைப்போர் பொலிவுதோன்ற இன்று கண்டாற்போலக் காண்போம்; எந்நாளும் இனிய மொழியோடு எளிய செவ்வியை யாகுக; பெரும! ஒருபிடி கிடக்கும் சிறிய இடம் ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டையுடையோய் - எ - று. நாடுகிழவோய்! இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; அதனால், நின் இகழ்பாடுவோர் எருத்தமடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற யாம் இன்று கண்டாங்குக் காண்குவமெனக் கூட்டுக. வல்லாளனையென்பதனுள் ஐகாரம் முன்னிலை விளக்கிநின்றது; அசைநிலையுமாம். மதி : முன்னிலையசைச்சொல். ‘கழறைஇய வல்லாளன்’ என்றதனாற் பகையின்மையும், ‘ஒருபிடி படியுஞ் சீறிட மெழுகளிறு புரக்கும் நாடுகிழவோய்’ என்றதனாற் பொருட்குறைவின்மையுங் கூறியவாறாயிற்று. |