(கு - ரை.) 1-2. ஊன்றடி - ஊன்பிண்டம்.அரசர்களில், போர்க்களத்து வீழ்ந்தோரே துறக்கம்பெறுவர்; அங்ஙனமின்றி நோயால் இறந்தோருடம்பைத்தருப்பையிற் கிடத்தி வாளாற் போழ்ந்து, ‘போரில்மாண்டோரடையும் கதியை இவர் அடைக’ எனக்கடவுளை வேண்டிஅவ்வுடம்பை அடக்குதல் விதியென்பது ஈண்டறியற்பாலது;இதனை “திண்பிணி முரசம்” (புறநா. 93), “தருப்பையிற்கிடத்தி ....... நாணுத்தகவுடைத்து” (மணி. 23: 13 - 6), ‘மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்துவீழ்ந்தோரே துறக்கம் பெறுவர்’ (தொல். அகத்திணை.சூ. 44 ந.), (கம்ப. மந்திர. 20, 28) என்பவற்றாலும்அறிக. அன்று: பலவின்பாற்பொருளிலும் வரும். 3-7, “மான வருங்கல நீக்கி யிரவென்னு,மீன விளிவினால் வாழ்வேன்ம-னீனத்தால், ஊட்டியக்கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு, நீட்டித்து நிற்குமெனின்” (நாலடி. 40); “மறனிழுக்கா, மானமுடைதரசு”,“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை,பீடழியவந்த விடத்து”, “மயிர்நீப்பின்வாழாக் கவரிமா வன்னார், உயிர்நீப்பர் மானம்வரின்”, “இளிவரின் வாழாத மான முடையார்,ஒளிதொழுதேத்து முலகு” (குறள், 384, 968 - 70); ‘மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே” (இனியது.14) என்பவை இச்செய்யுளின் பொருளை விளக்குகின்றன. ‘தொடர்ப்படு.......உலகத்தானே :இது தன்மாட்டு வருத்தத்தான் இழிப்புப் பிறந்தது’(தொல். மெய்ப்பாடு. சூ. 6, இளம்.) பதம் -உணவு. அளவை: பண்பாகு பெயர். 7. ஈன்மரோ - பெறுவார்களோ; மகரம்எதிர்காலம் உணர்த்திற்று. மு. காஞ்சித்திணையுள், தாமேயேங்கியதாங்கரும் பையுள் என்னும் துறைக்கு மேற்கோள் (தொல்.புறத்திணை. சூ. 19, இளம்); ‘தாமே யேங்கிய வென்பதற்குச்சிறைப்பட்டார் தாமே தனித்திருந்தவென்று கூறி, குழவி.............உலகத்தானேயென்னும் புறப்பாட்டைக் காட்டுவாருமுளர்’ (தொல்.புறத்திணை. சூ. 24, ந.) (74)
1. துஞ்சிய என்பதற்கு மூர்ச்சித்தவென்று பொருள்கொள்ளவேண்டும் போலும்.
|