(கு - ரை.) 1. மாகவிசும்பு - மாகமாகிய விசும்பு (புறநா.35 : 18); மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் நடு; பரி.1 : 47, பரிமேல். 2. மூவைந்து - பதினைந்துதிதி. 4. இயம் - வாச்சியம். இசையா - இசைத்து. 1 - 4. புறநா.393 : 20. 5. கங்குலின் கடையில். 8. குரலைக் கேட்டான். 14. தொல். இடை. சூ. 44, சே,; ந.மேற். 17. “பசிப்பிணி மருத்துவன்” (புறநா. 173 : 11) 19. வேள்வித்தூணம் - யூபத்தம்பம்; புறநா.15 : 21. புறநானூறு மூலமும் உரைவகையும் முற்றுப்பெற்றன. |