(கு - ரை.) 1. புறநா. 209 : 2; தொழுவர் - தொழில்செய்வார்; மதுரைக். 89. 3. உம்மீறு உந்தாய்த் திரிந்ததென்பதற்கு, ‘பாயுந்து’ என்பது மேற்கோள்; இ. வி.சூ. 244, உரை. 1-3. “நெல்லரியும்.....பாயுந்து; இதிற் ‘பாயும்’ எனற்பாலது ‘பாயுந்து’ என வந்தது” (தொல். இடை. சூ. 7, தெய்வச்.) உம் உந்தாயிற்றென்பதற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 340,; நன். வி.சூ. 341. 5. புறநா.29 : 15. 4-6. குரவை : புறநா.129 : 1 - 3; கலித்.106 : 32 - 3; அகநா. 20:7. 3-6. ‘பாயுந்து’, ‘தூங்குந்து’ என வருவன பெயரெச்சவினைத் திரிசொல் என்பர்; தொல். எச்ச. சூ. 61, ந. 4. திமில் - தோணி; பரதவர்-நுளையவர்; இவர் கடற்கரையில் வாழும் ஒருவகைச் சாதியார்; திமிலர் என்றும் கூறப்படுவர். 7. “புன்னை, உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்” (குறுந்.5 : 2 - 3.) ‘கலித்தல்’ தழைப்பென்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 93, தெய்வச். 9. “எல்லென்பது உரிச்சொனீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான் இடைச்சொல்லென்று கோடும்; ‘எல்வளை’ என எல்லென்பது இலங்குதற்கண் வந்தவாறு” (தொல்.இடை. சூ. 21, சே.) தலைக்கை : கலித்.73 : 16, ந. 8-9. “மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன், முழவுறழ் தடக்கையி னியல வேந்தி, மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து” (முருகு.214. 6.) 11. “மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற், பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப” (மதுரைக்96 - 6); “அணிமலர் முண்டகத்தாய்பூங் கோதை, மணிமரு ளைம்பால் வண்டுபடத் தைஇ” (நற்.125 : 2 - 3); “முண்டகக் கோதை நனையத், தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின் றோளே” (ஐங்குறு.121). முண்டகக் கோதை: (தொல். புள்ளி. சூ. 1, ந. மேற்.) 1-17. “நெல்லரியும்.....கெழீஇய என்ற வழி உம் உந்தாயிற்று” (தொல்.இடை. சூ. 43, தெய்வச்.); பெயரெச்ச வினை அடுக்கி வந்து ஒரு பெயர் கொண்டதற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 354. 1-19. “நெல்லரியுமிருந்தொழுவர் என்னும் புறத்தொகைப் பாட்டினுள் ‘தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து’ எனவும், ‘தண்குரவைச் சீர்தூங்குந்து’ எனவும், ‘எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து’ எனவும், ‘முந்நீர்ப்பாயும்’ எனவும் செய்யுமென்னும் பெயரெச்சம் அடுக்கி, ‘ஓம்பா வீகை மாவே ளெவ்வி, புனலம் புதவின் மிழலை’ என்னும் ஒருபொருள் கொண்டு முடிந்தவாறு கண்டுகொள்க; ஆங்குத் ‘தாங்கா விளையு ணல்லூர் கெழீஇய’ என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது” (தொல்.வினை. சூ. 36, சே.; ந.; இ. வி.சூ. 328, உரை.) 20. மு. ஐங்குறு.9: 4. 21. தொன்முதிர்வேளிர்-அகத்தியமுனிவராற் கொண்டுவரப்பட்ட பழமை முதிர்ந்த வேளிர்; இது, “துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல்வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்......கொண்டுபோந்து” “மலய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்” (தொல்.பாயிரம.் ந.; அகத். சூ. 32, ந.) எனப் போந்துள்ள வாக்கியங்களால் விளங்குகின்றது. 22. ‘தரல்’ படர்க்கைக்கண் வந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 380. 24. “ ‘நெல்லரியு மிருந்தொழுவர், என்னும் புறப்பாட்டினுள், ‘நின்று நிலைஇயர் நின்னாண்மீன்’ என அவன் நாளிற்கு முற்கூறியவாற்றான் ஓர் இடையூறுகண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது” (தொல்.புறத். 36, ந.) 24-5. புறநா. 229 : 10 - 12. 29. “அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும், ஆணணி புகுதலு மழிபடை தாங்கலும், வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்த” (சிறுபாண்.210 - 12); “ஒன்னா ரோட்டிய செருப்புகன் மறவர், வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த” (மதுரைக்726 - 7); “தாள் வலம்படவென்று” (கலித்.31 : 13) 30. “வரையாது கொடுத்தலும், பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்த” (சிறுபாண்.217 - 8) 32. தண்கமழ்தேறல் : “தண்கமழ் நறுந்தேறல்” (கலித். 73 : 4); “தண்ணற வுண்களி” (திருச்சிற்.122) 31-33. புறநா.56 : 18 - 21, 367; 6 - 7; “மகிழ்.......மகளிர், போக்கில் பொலங்கல நிறையப் பல்கால், வாக்குபு தாத்தர” (பொருந.84 - 7); “இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும், மகிழ்ந்தினி துறைமதி பெரும” (மதுரைக். 779 - 81); “பூங்குழை மகளிர் பொலங்கலத் தேந்திய, தேங்கமழ் தேறலொடு தெளிமது மடுப்பினும்” (பெருங்.2. 14 : 60 - 61) 34-6. புறநா. 165 : 1 - 5, 366 : 1 - 5; “மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கண் மாயா, தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய், வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேனும், ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே” (கம்ப.வேள்வி. 30) (24)
|