(கு - ரை.) 1. அடங்கல் ஆனா - அடங்குதலமையாத. 2. காழ் - காம்பு. 2 - 3. மூழ்குதற்கு எஃகத்தையும் தந்தை பெயர்ப்பான்; மூழ்கல் இங்கே மண்ணுமங்கலமெனப்படும்; இதுபின் நிகழ்வது; "நீரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப்பில்கி யழல்விம்மிப், போரேந்திப் பூவணிந்து புலவுநாறும் புகழ்வேலோன்" (சீவக.2599) என்பதனாலும் அறியலாகும். 4. கழனி வாயிலிலும் பொய்கையிலும்; வாயில் - வழி. 5. கயல் ஆர் - கயல்மீனை உண்ணுகின்ற. நாரையை உகைத்த வாளை மீனை. 6. ஒய்யும் - கொண்டுசெல்லும். 8. அணந்து - அண்ணாந்து. 9. இறை - சந்து; கலித்.38 - 26. 10. "பிணையெழின் மானோக்கு" (கலித். 58 : 2)மடநோக்கு (10) ஊர்கவினிழப்பவும் வருவதுகொல்லோ (7) (354)
|