(கு - ரை.) 1. அண்ணல் - தலைவன். 5. ஈதல் ஆனா - கொடுத்தல் தவிராத. 6. "பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்" (176) என முன்னும் இச்சுனை பாராட்டப்பட்டுள்ளது. 2 - 6. அரசராக இருந்தாலும் போர்செய்தலையொழித்துப் புகழ்ந்து பாடிக்கொண்டு வருவராயின், அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் இயல்பினனென்று பாரியின் கொடைச்சிறப்புக் கூறினார் ; புறநா. 109 - ஆம் பாட்டாலும் விளங்கும். 6 - 7. "மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியிற், சூருடை யடுக்கத் தாஅங் கடுப்ப, வேனி லானே தண்ணியள்" (குறுந்.376 : 1 - 3) ; "பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக், கன்னிய மகளிரிற் காண்டற் கரியன, நன்மணி புரித்தன வாவி நான்குள" (சீவக.1203) 8. பெண்மை - அமைதித்தன்மை ; சீவக.356, ந. 9 - 10. விரிந்த துகில் புகைக்கு உவமை ; முருகு.138. 11. பாடினோர்பெயர் இதிற் குறிப்பிக்கப்பெற்றுள்ளது. 12. வாணுதல் - கன்னி. 14. நெற்கவளம் : புறநா. 44 : 2, குறிப்புரை. தீற்றி - உண்பித்து ; சீவக.3105. 16. வேந்தர் - மணம்பேசவந்த அரசர். தன்னையர் - தமையன்மார். 21. உருத்தல் - தோன்றல். 22. ஞெமுக்குவோர் - அழுத்துவோர் ; சீவக.2552. (337)
|