திணை - வாகை; துறை - அரசவாகை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) படையினது ஆரவாரம்,எழுகடலுங் கூடி ஒலிக்கும் ஒலியினும் பெரிது; அவனுடையகளிறு, கார்காலத்து மழையின்கண் இடியினும் முழங்குதலைஅமையா; நாராற் பயிலத்தொடுக்கப்பட்ட ஆத்திக்கண்ணியையும்இடக்கவிந்த கையினையுமுடைய வீரனது கையின்கட் பட்டோராகியஇரங்கத்தக்கார்தாம் யார்கொல்?-எ - று. |
(கு - ரை.) 1-2. யானைமுழக்கிற்குஇடிமுழக்கு உவமை: “யானை முழக்கங் கேட்ட, கதியிற்றேகாரின் குரல்” (பரி. 8 : 17 - 8); “விசும்பின்,ஏறெழுந்து முழங்கினு மாறெழுந்து சிலைக்கும், கடாஅயானை” (அகநா. 144); “கார்ப்பெய லுருமிற்பிளிறி.......மையல் வேழ மடங்கலின்” (குறிஞ்சிப்.162 - 5); களிறுங் களித்ததிருங் கார்” (பு. வெ.37) 3-4. ஆர்நார் என்பதற்கு ஆத்திநார்என்று பொருள் கொள்ளலாமாயினும் பாட்டுடைத்தலைவன்சோழனாதலின், ஆர்க்கண்ணியென இயைத்து ஆத்திமாலையென்று பொருள்கூறினார்; “ஆர்புனைதெரியனெடுந்தகை”என்பர் பின்னும்; 82 : 6. ஆர் - ஆத்தி. அரசன் இயல்பையும்வென்றியையும் கூறினமையின், இஃது அரசவாகையாயிற்று, (81)
|