134
இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.

(பி - ம்.) 2 ‘வாணிக னாஅயலன்பிறவும்’

திணை - அது; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) இப்பிறப்பின்கட்செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவுமென்று கருதிப்பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கொள்ளும்வணிகன் ஆய் அல்லன்; அமைந்தோர் பிறரும் போயவழியென்றுஉலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பட்டது, அவனதுகைவண்மை-எ - று.

அன்றி, ஆய் அறவிலை வணிகன் அல்லன்;பிறரும் சான்றோர் சென்ற நெறியெனக் கருதி அச்செய்கையிலேபட்டதன்று, அவன் கைவண்மை யென்றுரைப்பாரும் உளர்.இதற்குப் பட்டன்றென்பது மறைப்பொருள் படாமையின்,பட்டதன்றென்பது பட்டன்றென விகாரமாகக் கொள்க.


(கு - ரை.) 1 - 2. புறநா. 141 : 14- 5; "ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம்வரையா,தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" (நாலடி.98); "இம்மையாற் செய்ததை யிம்மையேயாம்போலும், உம்மையே யாமென்பாரோரார்காண்" (திணைமாலை. 123); "வறியார்க்கொன்றீவதேயீகைமற் றெல்லாம், குறியெதிர்ப்பை நீர துடைத்து"(குறள், 221); "வைப்பானே வள்ளல் வழங்குவான்வாணிகன்" (சிறுபஞ்ச. 34); "ஆற்றுநர்க்களிப்போ ரறவிலை பகர்வோர்" (மணி. 11 : 92);"சிறுநன்றி யின்றிவர்க்கியாஞ் செய்தக்கானாளைப், பெறுநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி,தானவாய்ச் செய்வதூஉந் தானமன் றென்பவே, வானவாமுள்ளத் தவர்" (யா. வி. சூ. 4, மேற்.)

மு. செய்ததென்றது அறம்பாவமென்னுமிரண்டற்கும்பொது வாயினும் இங்கே அறத்தை உணர்த்தி நின்றது.'இது பிறருஞ் சான்றோர் சென்றநெறி யென்றமையின்,அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது' (தொல்.புறத்திணை. சூ. 35) என்பர் நச்சினார்க்கினியர்.

(134)