திணை - அது; துறை - இயன்மொழி, பரிசிற்றுறையுமாம். நாஞ்சில்வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் (பி - ம்.பெயரியனார், பெயரினார்) பாடியது. (இ - ள்.) ஒலிக்கும் முரசினையும்இனம் அமைந்த யானையையும் உடைய கடலாகிய எல்லையையுடையநிலத்தின்கண் வென்றிபொருந்திய மூவேந்தரை இன்னமும்யான் ஒருவனே பாடும் அவாவையறியேன்; நீதான் முன்னேதொடங்கி யானறியுமவன்; நீர்நிறைந்தபள்ளத்தின் கண் விதைத்த வித்து நீரின்மையாற்சாவாது கரும்புபோலத் தழைக்கும், மழையால் முகந்துசொரியப்பட்ட நீர் கோடை காயினும் மகளிர் கண்போன்றகுவளை முதலிய மலர்பூக்கும், கரியதாளையுடைய வேங்கைமலரின் நாடோறும் பொன்போலும் அப்பூவைச் சுமந்துமணிபோலும் நீர் கடற்கட்செல்லும் செவ்விய மலைப்பக்கத்தையுடையநாஞ்சிலென்னும் மலையையுடைய பொருந! சிறிய வெளியஅருவியையுடைய பெரிய மலையையுடைய நாட்டையுடையாய்!நீ வாழ்வாயாக; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும்தாயும் வாழ்க-எ-று. நீர் மலர்பூக்குமென இடத்துநிகழ்பொருளின்தொழில்இடத்துமேல் ஏறிநின்றது. கோடைக்காயினுமென்பது பாடமாயின்,கோடைக்கட்காயினுமென்றானும் கோடைக்கணாயினுமென்றானும்உரைக்க. முன்னின்ற பெயரெச்சம் மூன்றும் நாஞ்சிலென்னும்நிலப்பெயர் கொண்டன. தன் பழமை தோன்றப் புகழ்ந்துகூறுவான், மூவரையும் பாடும் அவாவை இன்னும் அறியேனென்றதாகக்கொள்க. |