(கு - ரை.) 1. "இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் ஞாலம்" (பெருங்.2. 17 : 105) 2. உடைமரத்தின் இலை மிகச்சிறியது; "சிறியிலை யுடை" (புறநா.324 : 4) 3. "ஒருதா மாகிய பெருமையோர்" (புறநா.366 : 4); "ஒருநீயாகித் தோன்ற" (முருகு.294) 1 - 3. "இருங்கட லுடுத்த, மண்ணாள் செல்வத்து மன்னவரேறே" (மணி. 22 : 80 - 81) 4. புறநா.55 : 21, குறிப்புரை. 3 - 6. புறநா. 366 : 1 - 5. 7 - 8. ‘வீயாது...இல்லையென்புழியும், வீயாமை நீங்காமைக்கண் வந்தது’ (குறள்.207, பரிமேல்.) 9. மு. புறநா. 366 : 23. மடங்கல் - யமன். "வருங்காலன் றிண்ணிதே" (சிறுபஞ்ச. 26) 14. சீவக.2984, ந. மேற். 10 - 14. புறநா.360 : 16 - 9. 14 - 5. ‘இழிபிறப்பினோன்......மிசையுமென்புழிப் பெற்றென்னுஞ் செய்தெனெச்சத்திற்கு முடிபாகிய மிசையுமென்னும் வினையை இடைநின்ற சொற்கள் விசேடித்து நின்றன’ (தொல்.எச்ச. சூ. 59, ந.) 16 - 8. முடிந்தது போன்று முடியாதாகிய புறப்பாட்டு வண்ணத்திற்கு (தொல்.செய். சூ. 225, பேர்., ந.) இவ்வடிகள் மேற்கோள். மு.இச்செய்யுள், ‘மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை’ (தொல். புறத்திணை. சூ. 19, இளம்.) என்னுந் துறைக்கும், ‘வீடேதுவாக வன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது’ (தொல்.புறத்திணை. சூ. 24, ந.) என்பதற்கும். ‘வாயுறைவாழ்த்து’ (தொல். செய். சூ. 107, இளம். 112, பேர்., ந.) என்னும் பகுதிக்கும் மேற்கோள்; ‘இருங்கடலுடுத்த.....துறந்தே: இதனுள், உப்பிலாஅ வவிப் புழுக்க லென்பது முதலாக மூன்றடி வஞ்சியடி’ (தொல். செய். சூ. 112). என்பது இளம்பூரணம்; ‘உப்பிலாஅவவிப் புழுக்கல், கைக்கொண்டு பிறக்குநோக்காது’ எனவும் காட்டுப; இவை வஞ்சியடியெனப்படுமென்பது. வெண்சீரான் வஞ்சியடி வருமோவெனின் வாரா, வஞ்சிச் சீர்விரவினல்லது, உப்பிலாஅ வவிப்புழுக்கல்: என்பதோவெனின், அது மற்றை இரு சீரடியொடு கூட்டத்துக் காட்டலானும் வஞ்சியடி போன்றது’, ‘உப்பிலாவவிப் புழுக்கல் முதலியன வஞ்சியடி’ (தொல். செய். சூ. 69. பேர்.,ந,); ‘இருங்கடல்...........துறந்தே : இதனுள்்உப்பிலாஅ வவிப்புழுக்கல் எனவும், கைக்கொண்டு பிறக்குநோக்காது, இழிபிறப்பினோ னீயப்பெற்று’ எனவும் வஞ்சியடி விரவி வந்தவாறு" (யா. வி.அடியோத்து, சூ. 7; யா. கா.ஒழிபு. சூ. 4, உரை; இ. வி.சூ. 745, உரை) (363)
|