திணையும் துறையும் அவை. அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப்பூதநாதனார் பாடியது. (இ - ள்.) யாற்றிடைக் குறையுட் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து உடம்பாகிய முழுத்தசையை வாட்டும் வீர! நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார் பலராதலான், யான் இதற்கு உதவாது பிற்பட வந்ததற்கு என்னை அவரோடு சொல்லி வெறுத்தி நீ-எ - று. யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீயென்றும், இவனுடனே வடக்கிருந்தோர்களும் எதிரேற்றுக் கொள்ளாமைநோக்கி நின்குறிப்பிற்கு ஏற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினும் அமையும். ‘உள்ளாற்றுக்கவலை’ என்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையும் கூடிய இடமென்றுமாம்; கவர்த்தவழிக்குள்ளென்றுரைப்பாரும் உளர். 1அரசுதுறந்து வடக்கிருந்து உயிர்நீத்த உள்ளமிகுதியான் மள்ள வென்றார். |