(கு - ரை.) 2. வேங்கைப் பூமாலை: புறநா. 21: 9, 168: 15. மலர்களைப் பனந்தோட்டில் தொடுத்தல்: "கொம்மைப் போந்தைக் குடுமிவெண்டோ, டத்த வேம்பி னமலை வான்பூச், சுரியா ருளைத்தலை பொலியச் சூடி” (குறுந். 281: 2 - 4) 4. படலை - தழைவிரவித் தொடுத்த மாலை. 7 - 9. பரிசிலர் செல்வமும் வேந்தர் வென்றியும் நின்னோடு செல்லக் கல்லாயினையே எனக் கூட்டுக. மு. ‘ஊர்நனி......செலவே: இது கோவலர்: படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது’ (தொல். புறத்திணை. சூ. 5, ந.) (265)
|