(பி - ம்.) 3 ‘நகாரென’ திணை - பொதுவியல்; துறை -முதுபாலை. ............. குளம்பாதாயனார் (பி - ம். குளம்பாதயானார்)பாடியது. முதுபாலையாவது:- ‘’காம்புயர் கடத்திடைக் கணவனை யிழந்த பூங்கொடி யரிவை புலம்புரைத் தன்று” (பு. வெ. 254) (இ - ள்.) நின்னைப்பிரிந்து ஆற்றேனாகின்றேன்; என்னுடைய திறத்துவருத்தங்கொள்ளாதொழிவாயாக, இப்பொழுது; சுற்றப்பட்டகண்ணியை யுடைய நின்னோடு கூடி விளையாடப் போந்தஇளையோர் விளையாடா நிற்ப அவரோடு நகுகின்றிலேனென்றுகருதவந்த நின் இறந்து பாட்டை நெல் எழாத பசியமூங்கில்பட்டையொழித்தாற் போன்ற வெளுத்திருந்த வளையில்லாதவறிய கையைத் தலைமேலே ஏற்றிக்கொண்டு நின் சுற்றத்திடத்தேசெலுத்தச் செல்வேனோ இன்னும், இறந்துபடினல்லது?நின்வார்த்தையை எனக்கு சொல்லுவாயாக- எ - று. அவலமென்றது, பிரிந்தவழிஆற்றேனென்று வருந்தும் அவலத்தை. கூறும் நின்னுரையென அவன்சொற்கேட்டல் விருப்பினாற் கூறுவாள் போன்று மயங்கிக்கூறியவாறு. |