(கு - ரை.) 1. தலைவனைத் தலைவி‘என்னை’ எனப் புறத்திணைக்கட் கூறியதற்கு மேற்கோள்;தொல். பொருளியல், சூ. 52, ந. 2. தும்பி - ஒருவகை வண்டு. 4. வேட்கும் - விரும்பும். 5. குரால் - கூகைப்பெடை; மதுரைக்.170, ந.; கோட்டானுமாம். 6. விரிச்சி - நற்சொல்; புறநா.68 : 17, குறிப்புரை. 7. செம்முதுபெண்டு : புறநா. 276 : 3. 6 - 7. “நெல்லொடு, நாழி கொண்டநறுவீ முல்லை, அரும்பவிழலரி தூஉய்க்கை தொழுது,பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லை. 8 -11) 10. இவண் - இவ்விடத்து. 13. புறநா. 248 : 1 - 5. 12 - 3. புறநா. 248; ஆம்பலல்லி -ஆம்பலாகிய அல்லிக்காயரிசி; (சீவக. 355) 11 - 3. மழித்தலை - மழித்தலையுற்றதலை; புறநா. 250 : 4 - 5, 261 : 17 - 9. 14. கழிகலமகளிர் - விதவைகள்; புறநா.238 : 6. 15. வழிநினைந்து - பிற்காலவிளைவைஎண்ணி. ‘அதனினும்’ என்றது, ‘வாழ்க்கையோ வரிது’(10) என்றதைச் சுட்டியது. இவ்வடி ‘அழிவுநினைந்திருத்த லதனினு மரிதே’ என்றிருக்கலாம் போலும். (280)
|