(பி - ம்.) 2 ‘உய்த்தனன்’, ‘எடுத்தனன்கொளினுய்த்தனென் கோனே மார்பெடுக்கல்லேன்’ 6‘சேரநடத்தி’ திணையும் துறையும் அவை.
............ வன்பரணர் பாடியது. (இ - ள்.) ஐயோவென்று அரற்றுவேனாயின்அவ்வுரைவழியே வந்து நின் உடம்பாயினும் யான் காணப்பெறாமல்ஏதஞ்செய்யுமோவென்று புலியை அஞ்சுவேன்; இவ்விடத்தினின்றும்எடுத்துக்கொண்டுபோவேனென்று நினைப்பின் நினதுஅகலிய மார்பை எடுக்கமாட்டேன்; என்னையொப்பப்பெரிய நடுக்கத்தை உறுவதாக, உன்னை இறந்துபடும்பரிசுவந்து தாக்கிய அறமில்லாத கூற்றே. யாம் மலையினதுநிழற்கண்ணே அடைவேமாக; எனது நிரைத்த வளையையுடையமுன்கையைப் பிடித்து மெல்ல நடப்பாயாக-எ-று. நடவாயென்னும் முன்னிலைவினைச்சொல்சின்னென்னும் இடைச் சொல்லான் அசைக்கப்பட்டுநின்றது. |
(கு - ரை.) 3. புறநா. 291: 5. 3-4. ‘என்போற் பெருவிதிர்ப்புறுக நின்னை, இன்னா துற்றவறனில் கூற்றே: என்புழிப்போலவென்பது குறிப்புவினையெச்சமாய் நின்றது’ (தொல்.எச்ச. சூ. 18, சே.) மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள்புலம்பிய முதுபாலைக்கும் (தொல். புறத்திணை. சூ.19, இளம்.), இழவுபற்றி வந்த அழுகைக்கும் (தொல்.மெய்ப்பாடு. சூ. 5, இளம்.), தன்கட்டோன்றியஇழவுபற்றிப் பிறந்த அவலச்சுவைக்கும் (தொல்.மெய்ப்பாடு. சூ. 5, பேர்.) மேற்கோள்; ‘ஐயோ.........சிறிதே:இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறுகாண்க’ (தொல். செய். சூ. 194, இளம்.) (255)
|