194
ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
5படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.

(பி - ம்.) 6 - 7 ‘வுலகின தியற்கை,யினிய’

திணை - அது; துறை - பெருங்காஞ்சி.

பக்குடுக்கைநன்கணியார் பாடியது.

(இ - ள்.) ஒருமனையின்கண்ணேசாக்காட்டுப்பறை ஒலிப்ப ஒரு மனையின் கண்ணே மணத்திற்குக்கொட்டும்மிகக்குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்பக் காதலரோடு(காதலர் - கணவர்) கூடின மகளிர் பூவணியை யணியப்பிரிந்த மகளிரது வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர்வார்ந்து துளிப்ப இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப்படைத்தான் நிச்சிதமாக, அப்பண்பில்லாதோனாகியநான்முகன்; கொடிது இவ்வுலகினதியற்கை; ஆதலான், இவ்வுலகினதுதன்மையறிந்தோர் வீட்டின்பத்தைத்தரும் நல்லசெய்கைகளை அறிந்து செய்து கொள்க-எ - று.

காண்கவென்பது, காண்கெனக் குறைக்கப்பட்டது.

இதன் இயல்புணர்ந்தோர் இவ்வின்னாமையைஇனியவாகக் காண்க வென்றுரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 1. சாப்பறைக்கு நெய்தற்பறையென்ற பெயர் உண்மையால், அதனை நெய்தல் என்றார்.“நெஞ்சு நடுக்குறூஉ நெய்தலோசையும்“ (மணி.6 : 71)

1 - 2. “நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகளிரண்டி னிகழ்மங் கலவியங்க, ளறையு மொலியொன்றினிலொன்றி லழுகை யொலிவந் தெழுதலும்” (பெரிய.வெள்ளானை. 5)

3. புறநா. 146 : 7 - 10, 167 : 8 - 9-ஆம்அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.

5. படைத்தோன் : ‘ஐதே கம்மவிவ்வுலகுபடைத் தோனே” (நற். 240 : 1); “இரந்துமுயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து, கெடுக வுலகியற்றியான்” (குறள், 1062)

னகரவீற்றுவினைச்சொல்லின் ஈற்றயலினின்றஆகாரம் செய்யுளுள் ஓகாரமானதற்குமேற்கோள்; நன்.சூ. 352, மயிலை; நன் வி. சூ. 353.

மு. “மன்றங் கறங்க மணப்பறையாயின, அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை, ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே,வலிக்குமா மாண்டார் மனம்” (நாலடி. 23)

(194)